விவசாயிகள் போராட்டம் : லக்கிம்பூர் வன்முறை ஜாலியன் வாலபாக் படுகொலையை விட மோசமானது - கே.எஸ்.அழகிரி
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான படு கொலை உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். ஆங்கிலேயர்களையே விரட்டியடித்து வெற்றி பெற்றது போல விரைவில் மோடியை வெல்வோம் என்ற
கடலூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான கொலை நடந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். ஆங்கிலேயர்களையே விரட்டியடித்து வெற்றி பெற்றவர்கள் நாம் விரைவில் மோடியை வெற்றி பெறுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர், மத்திய இணையமைச்சர் ஆகியோர் விழாவில் பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் காருடன் உடன் வந்த கார் ஒன்று போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். அதே சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு விவசாயிகள் உட்பட 8 பேர் இதில் உயிரிழந்தனர். செய்தியாளர் ஒருவரும் காயமடைந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைய முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இரு தினங்களாக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது அறையை அவரே சுத்தம் செய்த வீடியோ காட்சிகள் வைரலானது.
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். லகிம்பூர் கேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்த வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கருப்பு நிற எஸ்யுவி கார் ஒன்று போராட்டம் நடைபெற்ற கூட்டத்தின் நடுவே திடீரென பாய்வதை காணமுடிகிறது. இதே வீடியோவை பிரியங்கா, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பகிர்ந்துள்ளனர்.
Recommended Video
வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் அறுதல் கூற சென்ற பிரியங்காகாந்தியை கைது செய்ததை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான படுகொலை உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
விவசாயிகள் படுகொலை.. 'நாட்டு மக்களுக்கு பதில் சொல்லுங்கள் பிரதமரே..' துளைத்தெடுத்த பிரியங்கா காந்தி
மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் இறந்துள்ளனர். அதனை தொடர்ந்து நடை பெற்ற கலவரத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 9 பேர் இறந்துள்ளனர். ஆங்கிலேய அரசு கூட படுகொலைக்கு பின் பஞ்சாப் செல்ல காங்கிரஸ் கட்சி தலைவர்களை அனுமதித்தனர். ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமல் கைது செய்துள்ளனர்
அதே போல் சத்தீஷ்கர் மாநில முதல்வர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தபட்டுள்ளளார். இந்தியாவில் ஜனநாயகம் தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் விவசாயிகள் பொதுமக்களும் மோடி அரசின் உண்மையான முகத்தை புரிந்துள்ளனர். இதனால் மோடி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றார். ஆங்கிலேயர்களையே விரட்டியடித்து வெற்றி பெற்றவர்கள் நாம் எனவே விரைவில் மோடியையும் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications