டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10.5% வன்னியர் உள் ஒதுக்கீடுக்கு விதித்த தடையை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்.. 2 புதிய உத்தரவு

Google Oneindia Tamil News

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை விதித்த தடை உத்தரவை நீக்க கோரிய வழக்கில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்லது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முன் இரண்டு முக்கிய உத்தரவுகளை இட்டுள்ளது. இது இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்பதில் மற்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடி.. ஜிகே மணி பேச்சுவன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடி.. ஜிகே மணி பேச்சு

 10.5% உள் ஒதுக்கீடு சட்டம்

10.5% உள் ஒதுக்கீடு சட்டம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அப்போதைய தமிழக அரசு சட்டம் இயற்றியது.

சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி மனுக்கள்

சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி மனுக்கள்

அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25 க்கு மேற்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபபட்ட நிலையில், அந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது வைக்கப்பட்ட வாதத்தில், "சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சட்டம்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பிற வகுப்பினருக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். மேலும் இது அரசியல் ஆதாயத்துக்காக தேர்தலை கணக்கில் வைத்து இயற்றப்பட்ட சட்டமாகும், எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் வாதம் - ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழக அரசின் வாதம் - ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வாதங்களை ஏற்காத மறுத்த நீதிபதிகள், முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், எனவே, ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அரசியல் கட்சிகள்

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அரசியல் கட்சிகள்

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரால் 10 க்கும் மேற்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேவேளையில் 15 க்கும் மேற்பட்ட கேவிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு துரிதப்படுத்தக்கோரி வழக்கு

மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு துரிதப்படுத்தக்கோரி வழக்கு

இந்நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு கலந்தாய்வுகள், மாணவர் சேர்க்கை தாமதம் ஆகிறது என்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும், பட்டியலிடப்படவில்லை.

அரசின் கோரிக்கை ஏற்று விசாரணை தொடக்கம்

அரசின் கோரிக்கை ஏற்று விசாரணை தொடக்கம்

நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு, 10.5% உள் ஒதுக்கீடு மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்ககோரி தமிழக அரசு மீண்டும் முறையிட்டது. அதனையேற்ற தலைமை நீதிபதி வழக்கு வெள்ளிக்கிழமை (டிச.17) பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார், ஆனால் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை இன்றே விசாரிக்க பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணை ஆரம்பம்

விசாரணை ஆரம்பம்

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.காவாய், பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வில் 7வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழக அரசு, பா.ம.க, மருத்துவர் ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்ட 10 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது

 75000 மாணவர்கள் காத்திருப்பு தமிழக அரசு வாதம்

75000 மாணவர்கள் காத்திருப்பு தமிழக அரசு வாதம்

அப்போது தமிழக அரசு தரப்புக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர் தமிழக அரசுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது, அதனடிப்படையில் தான் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது, எனவே இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஏனெனில், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், கல்லூரி மாணவர் சேர்க்கை, தடைபட்டுள்ளது 75000 மாணவர்கள் காத்திருக்கின்றனர் என கோரிக்கை வைத்தனர்.

எதிர்தரப்பு வாதம் தடையுத்தரவு கூடாது என வாதம்

எதிர்தரப்பு வாதம் தடையுத்தரவு கூடாது என வாதம்

அதேவேளையில் வன்னியர் உள் ஒதுக்கூட்டுக்கு எதிரானவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, தமிழகத்தில் மிகவும். பிற்படுத்தப்பட்ட பிரிவில் 160 பிரிவினர் இருக்கும்போது அதில் ஒரு பிரிவினருக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது சமத்துவத்துக்கு எதிரானது, மேலும் எந்த தரவுகளும் இல்லாமலே வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விசயத்தில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க்கூடாது என வலியுறுத்தினார்.

இடைக்கால தடை இல்லை என உத்தரவு

இடைக்கால தடை இல்லை என உத்தரவு

இதனையடுத்து நீதிபதிகள், வன்னியர் உள்ஒதுக்கீடு மேல்முறையீட்டு வழக்கில், தற்போது எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்ததோடு, 10.5% உள் ஒதுக்கீடு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்

* இந்த வழக்கில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நேர விரயத்தை தவிர்க்க இரு தரப்பிலும் இருந்து வழக்கறிஞர்கள் அனைத்து கருத்துகளையும், எழுத்துப்பூர்வ வாதங்களையும் தொகுத்து நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்

* 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் மனுதாரர்கள், மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர்கள நாகமுத்து, கோபால் சங்கர நாராயணனும், வழக்கறிஞர்கள் டி.குமணன், எம்.பி.பார்த்திபன், பிரகாஷ் ஆகியோர் எழுத்துப்பூர்வ வாதம் பிரதிவாதங்களை தொகுத்து ஒரே நகலாக வழங்க வேண்டும்.

பிப்ரவரியில் முழு விசாரணை, ஒத்திவைப்பு இல்லை

பிப்ரவரியில் முழு விசாரணை, ஒத்திவைப்பு இல்லை

மேலும் இந்த தொகுப்புகளை வரும் பிப்ரவரி 10க்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். வழக்கு பிப்ரவரி 15, 16ம் தேதி அன்று விரிவாக விசாரிக்கப்படும் எனவும், அந்த இரு நாட்களில் வழக்கின் வாதங்களை அனைத்து தரப்பும் முடிக்க வேண்டும், மேலும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வழக்கை ஒத்திவைக்க எவரும் அனுமதி கோரக்கூடாது என உத்தரவிட்டனர்.

நியமனத்தை நீக்கவோ, புதிதாக நியமனமோ கூடாது

நியமனத்தை நீக்கவோ, புதிதாக நியமனமோ கூடாது

இதனைதொடர்ந்து 10.5% மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை எந்த மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது எனவும், அதேவேளையில் ஏற்கனவே செய்யப்பட்ட பணி நியமனங்கள், மாணவர் சேர்க்கைகளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

English summary
10.5% Vanniyar Internal Allocation Case Backdated: Supreme Court 2 New Order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X