மோடியைக் கொல்ல சதி... களமிறங்கியுள்ள 20 ஸ்லீப்பர் செல்கள் - என்ஐஏவுக்கு வந்த மிரட்டல் இமெயில்
மோடியை கொல்வதற்கு சதி நடந்துள்ளதாகவும் 20 கிலோ வெடி பொருட்களுடன் 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பிரதமர் மோடியை கொல்லும் வேலைக்காக குறைந்தது 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சுமார் 20 கிலோ அளவுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுடைய மும்பை பிரிவுக்கு வந்துள்ள இ மெயிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாக்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை ஸ்லீப்பர் செல். விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்குப் பிறகு ஸ்லீப்பர் செல் பற்றி சாதாரண மக்கள் கூட நன்றாக தெரிந்து கொண்டனர். பயங்கரவாதிகள் மக்களோடு மக்களாக பழகி சதி வேலைகளை செய்வது பற்றி துப்பாக்கி படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடியைக் கொல்வதற்கு ஸ்லீப்பர் செல்கள் ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்களுடன் களமிறங்கியிருப்பதாக மிரட்டல் மெயில் என்ஐஏவிற்கு வந்துள்ளது.

மோடிக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடிக்கு ஸ்பெஷல் புரொடெக்சன் குரூப் என்ற அமைப்பு முழு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த அமைப்பு 24 மணி நேரமும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்திய பிரதமருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவர் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அமைப்பு பல பயிற்சிகளை பெற்றுள்ளது.

உயர் ரக ஆயுதங்கள்
இந்த ஸ்பெஷல் புரொடெக்சன் குரூப் அமைப்பில் மொத்தம் 3000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தும் திறன் பெற்றவர்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் FNF-2000 Assault Rifle, Automatic Gun and 17 M revolvers போன்ற ஆயுதங்களுடன் பிரதமரை சுற்றி இருப்பார்கள்.

20 ஸ்லீப்பர் செல்கள்
கடுமையான பாதுகாப்புகளுக்கு நடுவில் பிரதமர் மோடியை கொல்லை சதி திட்டம் நடந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை படுகொலை செய்யும் வேலைக்காக குறைந்தது 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சுமார் 20 கிலோ அளவுக்கு ஆர்.டி.எக்ஸ். வெடி பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மோடியைக் கொல்ல சதி
மேலும் என்.ஐ.ஏ.வுக்கு வந்த இ மெயிலில், சதித் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட வேலைகளை செயல்படுத்த ஸ்லீப்பர் செல்கள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ மெயில் அனுப்பி நபர், தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதனால் சதி குறித்த விபரங்கள் வெளியே தெரியாது என்றும் மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத அமைப்புகள்
இ மெயிலில் குறிப்பிட்டுள்ள தகவல்படி, இந்த சதித்திட்டத்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. என்ஐஏவின் மும்பை பிரிவுக்கு வந்துள்ள இந்த மின் அஞ்சல், விசாரணைக்காக மேலும் சில அமைப்புகளுக்கு பகிரப்பட்டுள்ளது. தற்போது சைபர் கிரைம் அமைப்பு, மின் அஞ்சல் வந்த ஐ.பி. அட்ரஸை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது. ஸ்லீப்பர் செல்கள் குறித்து மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதை அடுத்து மத்திய பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications