பிஎப் 7யை விட மோசம்.. சீனாவை அலறவிடும் 4 வகை கொரோனா வைரஸ்.. இந்தியாவை தாக்குமா? நிபுணர் கணிப்பு
டெல்லி: சீனாவில் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸால் தான் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அங்கு மொத்தம் 4 வைரஸ்கள் மக்களை தாக்குவதாகவும், இதில் பிஎப் 7 வைரஸை காட்டிலும் பிற வைரஸ்களால் தான் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்தியாவின் கொரோனா தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்கே அரோரா கூறியுள்ளார். மேலும் இந்த வைரஸால் இந்தியா பாதிக்கப்படுமா? என்பது பற்றியும் அவர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி 200க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியது. பலகோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக ஏராளமானவர்கள் பலியாகினர்.
இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது கடந்த ஒரு ஆண்டில் இருந்து கொரோனா பாதிப்பு என்பது இந்தியா உள்பட பல நாடுகளில் குறைந்து வருகிறது.

சீனாவில் கொரோனா பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க சில நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கியது. அதன்படி சீனா, தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக சீனாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தினமும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர். மேலும் ஒருநாள் பாதிப்பு என்பது அதிகபட்சமாக 3.7 கோடியாக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரங்களை சீனா முறையாக தெரிவிக்காமல் மறைத்து வருகிறது. மேலும் தினசரி பாதிப்பு என்பது சுமார் 4 ஆயிரம் முதல் 6 எனவும், பலி இல்லை எனவும் சீனா பொய்யான கணக்கை காட்டி வருகிறது. இருப்பினும் சீனாவை தொடர்ந்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கண்காணித்து கொரோனா பரவல், பாதிப்பு குறித்த அம்சங்களை வெளியிட்டு பிற நாடுகளை எச்சரித்து வருகின்றனர்.

மொத்தம் 4 வைரஸ் பரவல்
சீனாவை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரிக்க பிஎப் 7 வைரசுடன் சேர்த்து மேலும் 3 முக்கிய வைரஸ்கள் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் பிஎப் 7 வைரஸை விட பிற 2 வைரஸ்கள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ள விபரம் வெளியாகி உள்ளது.

என்கே அரோரா
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், அதுசார்ந்த பிரச்சனைகளை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தான் சீனாவின் நிலை பற்றி இந்தியாவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு( NTAGI)தலைவர் என்கே அரோரா முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். இதுபற்றி என்கே அரோரா கூறியதாவது:

4 வகை வைரஸ் பரவல்
‛‛சீனாவில் மொத்தம் 4 வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. BF 7, SVV, BN மற்றும் BQ ஆகிய உருமாறிய வைரஸ்கள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் பிஎப் 7 வைரஸ் 15 சதவீத பாதிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதாவது 50 சதவீதம் பேர் பிஎன் மற்றும் பிக்யூ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எஸ்விவி வைரஸால் 10 முதல் 15 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
சீனாவில் தற்போது இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்பது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். அங்குள்ள மக்கள் 3 முதல் 4 டோஸ்கள் வரை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் கூட தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது. செயல்திறன் குறைவான தடுப்பூசியால் எதிர்ப்பு திறன் உடனடியாக குறைகிறது. இதனால் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவின் நிலை என்பது நன்றாக உள்ளது.

இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை
இதனால் சீனாவில் பரவும் உருமாறிய வைரஸை கண்டு நாம் அச்சப்பட வேண்டாம். ஏனென்றால் தடுப்பூசி மற்றும் நோய் தொற்றின் காரணமாக உருவான கலப்பின(Hybrid) நோய் எதிர்ப்பு சக்தி இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதனால் சீனாவில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸை கண்டு நாம் அச்சப்பட தேவையில்லை. மேலும் இந்தியாவில் 97 சதவீத மக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.12 வயதுக்குட்பட்ட 96 சதவீத குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். இதுதவிர தற்போது இந்தியா முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகிறது. இதனால் இந்தியர்கள் பயப்பட வேண்டாம்'' என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications