74-வது குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு இன்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்!
டெல்லி: நாட்டின் 74- வது குடியரசு தினத்தையொட்டி இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

இந்த உரை அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். இதேபோல், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியிலும், அதனைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும். இதைனைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்படுகிறது.
அடுத்த நடவடிக்கை ஆரம்பம்- உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க குழு!
அகில இந்திய வானொலியில், பிராந்திய மொழிகளில் இரவு 9.30 மணி முதல் அதன் பிராந்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும்.