சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
டெல்லி: சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி நடத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் டெல்லி ஆம்ஆத்மி அரசு மீது புதிய மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு புகார் எழுந்தது.

இதையடுத்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ஆம்ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முதலில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அடுத்ததாக சஞ்சய் சிங் எம்பி கைது செய்யப்பட்டனர். மேலும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரியும் கூட நீதிமன்றம் வழங்கவில்லை. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததோடு, கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியதால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுக்கவில்லை. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் தான் சிறையில் இருந்தே ஆட்சி நடத்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை தாக்கல் செய்தவரின் பெயர் ஸ்ரீகாந்த் பிரசாத். இவர் தனது மனுவில், ‛‛டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான செய்தியை வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதுதொடர்பாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் சிறையில் இருந்தே அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சிறைத்துறை டிஜிபி செய்து கொடுக்கஉத்தரவிட வேண்டும். ஏனெ்னறால் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்த பிரதமர் மற்றும் முதல்வருக்கு அரசியலமைப்பு சட்டம் எந்த தடையையும் வழங்கவில்லை. இதனால் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications