குடியரசுத் தலைவர் பற்றி சர்ச்சை! காங். எம்பி ரஞ்சன் பேச்சு.. 2வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பினர். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத்தலைவரை விமர்சித்ததாக பாஜக எம்.பிக்கள் அமளியை கிளப்பினர்.
ஏற்கெனவே ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மன்னிப்பு கேட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 10வது நாளான இன்றும் நாடாளுமன்றத்தில் மேலெழுந்தது. எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி எம்.பிக்கள் என இருதரப்பினரும் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை, அக்னிபாத் திட்டம் என பல்வேறு பிரச்னைகளை கிளப்பினர். இதனையடுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஏற்கெனவே பதாகைகள் மற்றும் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்ப நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அதை மீறியதாக தற்போது வரை இரண்டு அவைகளிலும் சுமார் 27 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜோதிமணி, மாணிக்கம்தாகூர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னிப்பு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து 50 மணி நேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்னர் அமர்ந்து இரவு பகலாக தொடர் தர்ணாவை எம்.பிக்கள் நடத்தினர். இவ்வாறு போராடும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மன்னிப்கோரி மீண்டும் கூட்டத்தொடரின்போது போராட்டம் நடத்த மாட்டோம் என்று அவைத் தலைவருக்கு உறுதி கொடுத்தால் இந்த எம்.பிக்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டன.

ஆளும் கட்சியில் எம்.பிக்கள் அமளி
இந்நிலையில், குடியரசுத் தலைவர் குறித்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நேற்று ஆளும் கட்சி எம்.பிக்களும் அமைச்சருமான நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி ஆகியோர் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தங்கள் கட்சி சார்ந்த ஒரு எம்.பியை இவ்வாறு பேச அனுமதித்ததன் மூலம் சோனியாக காந்தி பெண்கள்-பழங்குடியின விரோதியாக மாற்றிவிட்டார் என பாஜக விமர்சித்தது. இந்த சர்ச்சை கூட்டத் தொடரின் 10வது நாளான இன்றும் எதிரொலித்தது.
Recommended Video

சோனியா காந்தி மன்னிப்பு
இன்றைய கூட்டத்தொடரில் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, சோனியா காந்தி மன்னிப்பு கோரினால் மட்டுமே நாடாளுமன்றம் நடைபெறும் என்று கூறினார். பாஜக எம்.பிக்கள் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். மற்றொருபுறம் சோனியா காந்தி அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் எனவே ஆளும் கட்சி எம்.பிக்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நான் இங்கு இருக்கும்போது சோனியா காந்தி குறிவைக்கப்படுவது ஏன் என்று இன்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.












Click it and Unblock the Notifications