இந்தியர்களின் ஆயுட்காலத்தில் 9 ஆண்டுகளைக் குறைக்கும் காற்று மாசு - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
காற்று மாசு காரணமாக 40 சதவிகித இந்திய மக்கள் தங்களின் ஆயுட்காலத்தில் 9 ஆண்டுகளை இழந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: காற்று மாசுபாடு இந்தியாவில் 40 சதவிகித மனிதர்களின் ஆயுட்காலத்தை 9 ஆண்டுகள் குறைப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனத்தின் ஆய்வு, ஒருவர் சுத்தமான காற்றை சுவாசித்தால் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் அதிக அளவு காற்று மாசுபாடு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்துள்ளதாக அது கூறியுள்ளது.
காற்று மாசு கண்ணுக்கு தெரியாத கொலையாளி. காற்று மாசு கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் அது ஒரு உயிர்கொல்லி என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மலேரியா, எய்ட்ஸ், போர் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட மிகப் பெரிய நோய்களை விட அதிகமான மக்கள் நச்சு காற்றை சுவாசிப்பதால் மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

29% மக்கள் நுரையீரல் புற்று நோயால் உயிரிழக்கின்றனர் 24% மக்கள் மூளை பக்கவாதத்தால் உயிரிழக்கின்றனர் 25% மக்கள் இதய நோயால் உயிரிழக்கின்றனர் 43% மக்கள் நுரையீரலில் நோய்தொற்று ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.
அசுத்தமான காற்றை மட்டும் சுவாசிப்பதன் மூலம், இந்தியர்களின் ஆயுள் சராசரி 1.7 ஆண்டு குறையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமையில் நடந்த டிசம்பர் 2018 ஆய்வில் கண்டறியப்பட்டது. கடந்த 2017இல் இந்தியாவின் வெளிப்புற காற்று மாசுபாட்டால் 6,70,000 இறப்புகளையும், வீட்டினுள் ஏற்பட்ட காற்று மாசுபாட்டால் மேலும் 4,80,000 இறப்புகளையும் கண்டதாக ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்தது.
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2016 வரை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வடமாநிலங்களில் காற்று மாசு கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக, மிக ஆபத்தான நிலையில் உள்ளது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் தயாரித்த காற்றின் தர வாழ்க்கை அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு காற்றின்மாசு சுமார் 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்கள் தங்களின் வாழ்நாளில் 3.4 ஆண்டுகள் முதல் 7.1 ஆண்டுகள் வரை இழக்கின்றனர். இந்தியா தனது தேசிய காற்று தூய்மை திட்டத்தை சரியாக செயல்படுத்தி, காற்று மாசுவை சுமார் 25 சதவீதம் குறைத்தால், இந்தியர்களின் ஆயுட்காலத்தை 1.3 ஆண்டுகள் நீட்டிக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உலகின் மிக நச்சுத்தன்மையான சிலவகை காற்றை இந்தியர்கள் சுவாசிக்கின்றனர். உலகின் மிக மாசுபட்ட 20 நகரங்களில் 15, இந்தியாவில் உள்ளது என்று கிரீன் பீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்திய ஆய்வில் கூறி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய குறைப்பிரசவ இறப்புகளில் சுமார் 91சதவிகிதம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ஏற்படுகின்றன. தூய்மையான காற்றை உறுதி செய்வதன் மூலம், பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களின் சுமையை, நாடுகள் குறைக்க முடியும் என்று அது கூறியது.
கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 4வது பெரிய நாடான இந்தியாவில் பருவநிலை பாதிப்பு, மழையின்மையால் தோன்றும் மாற்றங்கள், வெப்பம் அதிகரிப்பு மற்றும் 60 கோடி மக்கள் வசிக்கும் கங்கை சமவெளி பகுதியில் நிச்சயமற்ற மழைக்கு வழிவகுக்கிறது.
காற்று மாசுபாடு மரணங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, கருவுறுதல் மற்றும் பிரசவ செயல்முறையையும் பாதிக்கிறது என்று வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசுவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு தான் மனிதனுக்கு மிகப்பெரிய உடல்நலக்கேடு ஆகும். காற்று மாசுவை கட்டுப்படுத்துவதன் மூலம் மூளை பக்கவாதம், இதய கோளாறு, நுரையீரல் புற்று நோய் ஆகிய நோய்களிலிருந்து மக்களை காக்க முடியும்
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கைப்படி மனித உயிரிழப்புகளில் காற்று மாசு மற்றும் இதர மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
காற்று மாசுவால் ஏற்படும் சுவாச நோய்க்கு 49 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோயால் 33 சதவிகிதம் பேரும், நீரிழிவு மற்றும் இருதய நோய் காரணமாக 22 சதவிகிதம் பேரும், மூளை பக்கவாதத்தால் 15 சதவிகிதம் பேரும் மரணமடைவதாக இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
வட மாநிலங்களான பிகார், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப்,உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்றவை சிந்து - கங்கை சமவெளி என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம், அதாவது 48 கோடி மக்கள் இந்த பகுதியில்தான் வாழ்கின்றனர். இந்த அறிக்கை குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் நிலைமையை எடுத்துக்காட்டுகிறது, அங்கு ஒரு சராசரி நபர் இப்போது கூடுதலாக 2.5 முதல் 2.9 ஆண்டுகள் ஆயுட்காலம் இழக்கிறார்.
ஆயுட்காலம் எண்ணை அடைய, ஆராய்ச்சியாளர்கள் நீண்ட கால காற்று மாசுபாட்டின் பல்வேறு நிலைகளுக்கு ஆளான மக்களின் ஆரோக்கியத்தை ஒப்பிட்டு, அதன் முடிவுகளை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் பிற இடங்களுக்கும் பயன்படுத்தினர். கடந்த 2019 ஆம் ஆண்டு போல காற்று மாசுபாடு தொடர்ந்தால், வட இந்தியாவில் வாழும் மக்கள் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை இழக்க நேரிடும் என்று அறிக்கை கூறுகிறது. வயதானவர்களின் வாழ்க்கையை குறைப்பதில் காற்று மாசுபாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில், காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகளில் 75 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நிகழ்கிறது. 40 சதவிகித இந்தியர்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான காற்று மாசினை கட்டுப்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் தேசிய காற்று தூய்மை திட்டத்தைப் (NCAP) பாராட்டி, NCAP இலக்குகளை "அடைவதும் தக்கவைப்பதும்" நாடு முழுவதும் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை 1.7 வருடங்களும் டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுட்காலத்தை 3.1 வருடங்கள் உயர்த்தும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கொரோனா காலத்தில் சில மாதங்கள் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் எந்தவிதமான வாகனங்களும் இயக்கப்படாமல் தொழிற்சாலைகள் இயக்கப்படாமல் காற்று மாசு குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications