"40 நாள்.." இந்தியாவை சூளும் ஓமிக்ரானின் எக்ஸ்பிபி வைரஸ்.. அலர்ட் செய்த ‛இன்சாகாக்’.. என்னாச்சி?
டெல்லி: இந்தியாவில் அடுத்த 40 நாள் முக்கியம் எனவும், ஜனவரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் பரவும் வைரஸ்கள் பற்றிய முக்கிய தகவல்களை மத்திய அரசின் கொரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக் அல்லது INSACOG) வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஓமிக்ரானின் உருமாறிய வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் எக்ஸ்பிபி (XBB) வகை வைரஸ் தான் அதிகமாக பரவி வருவதாக முக்கிய தகவலை கூறி இன்சாகாக் எச்சரித்துள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பொதுமக்களை உருமாறி தாக்க தொடங்கியது. இதனால் பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஏராளமானவர்கள் இறந்தனர்.
இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் தான் சீனா, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை
சீனாவில் உருமாறிய ஓமிக்ரானின் பிஎப் 7 வைரசும், அமெரிக்காவில் உருமாறிய ஓமிக்ரானின் எக்ஸ்பிபி.1.5 எனும் வைரஸ் ஆகியவை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவை விட சீனாவில் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, பலியும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் கொரோனா தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து கொரோனா தடுப்புக்கான பணியை தீவிரமாக முன்னெடுத்துள்ளன.

40 நாள் எச்சரிக்கை
மேலும் அடுத்த 40 நாள் என்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது எனவும், இந்தியாவில் ஜனவரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக கொரோனா பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. மேலும் சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

‛இன்சாகாக்’ சொன்ன முக்கிய தகவல்
இதுதவிர கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் கொரோனா பரவல், வைரஸ் மரபணு மாறுபாட்டை ஆய்வு செய்து வரும் இன்சாகாக் குழு (INSACOG) சார்பில் இந்தியாவில் பரவும் வைரஸ்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:

ஓமிக்ரான் உருமாறிய வைரஸ்கள் பரவல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பை பொறுத்தமட்டில் நவம்பர் மாதத்தில் இருந்து ஓமிக்ரானின் உருமாறிய வைரஸ்கள் தான் ஆதீக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் தற்போது எக்ஸ்பிபி (XBB) வகை வைரஸ் பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது. இதுதவிர ஓமிக்ரானின் உருமாறிய பிஏ.2.75(BA.2.75) மற்றும் பிஏ.2.10(BA.2.10) ஆகிய வைரஸ்களும் பரவி வருகிறது.

எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு அதிகம்
எக்ஸ்பிபி வைரஸ்களை காட்டிலும் பிஏ.2 வகை வைரஸ்கள் பரவல் குறைவாக உள்ளது. இந்தியாவில் தற்போதைய பாதிப்பில் 63.2 சதவீதம் பேர் எக்ஸ்பிபி வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 5ல் இன்சாகாக் வெளியிட்ட புல்லட்இன்னில் இந்தியாவில் 46. 5 சதவீதம் பேர் பிஏ.2.75 வைரஸாலும், 35.8 சதவீதம் பேர் எக்ஸ்பிபி மற்றும் அதன் துணை உருமாற்ற வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து இருந்த நிலையில் தற்போது எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது.

எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு?
மேலும் இந்தியாவின் வடக்கு பகுதியில் எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு பரவலாக உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் பிஏ.2.75 வைரஸ் பாதிப்பு பரவலாக உள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதுதவிர பிஏ.2.10 வைரஸ் உள்பட ஓமிக்ரானின் பிற உருமாறிய வைரஸ் பாதிப்பு பரவலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும நோயின் தீவிரம் மற்றும் மருத்துவமனைகளில் சேர்க்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது அதிகமாக இல்லை.

இந்தியாவில் அச்சமா?
இந்தியாவில் முதல் முதலாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்த உருமாறிய எக்ஸ்பிபி வைரஸ் தான் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இதுபற்றி சமீபத்தில் மினசோட்டோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் மைக்கேல் ஓஸ்டேர்ஹோம் கூறுகையில், ‛‛உண்மையிலேயே தற்போதைய சூழலில் கொரோனா வைரஸில் மோசமான உருமாறிய வைரஸ் என்பது XBB ஆகும்'' என எச்சரித்தார். இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவில் எக்ஸ்பிபி.1.5 எனும் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அங்கு 40 சதவீத பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் எக்ஸ்பிபி மற்றும் எக்ஸ்பிபி வகை உருமாறிய வைரஸ்களின் நிலையை INSACOG உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் தற்போது வரை இந்தியாவுக்கு எக்ஸ்பிபி வைரசால் ஆபத்து எதுவும் இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications