வரும் ஜூலை 15 வரை.. தடுப்பூசி பணிகள் மெதுவாக தான் நடைபெறும்.. கைவிரிக்கும் அதிகாரிகள்.. ஏன் தெரியுமா
டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதால் மெகா வேக்சின் பணிகள் ஜூலை 15ஆம் தேதி வரை தொடங்கப்படாது எனத் தெரிகிறது,
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர்,
வேக்சின் பணிகளை வேகப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய வேக்சின் கொள்கைகளை அறிவித்தது. இவை கடந்த ஜூன் 21ஆம் தேதி அமலுக்கு வந்தன.

கொரோனா தடுப்பூசி
இதையடுத்து வேக்சின் பணிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தேசிய தலைநகர் பகுதிகளில் பல மடங்கு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறைவான நேரத்தில் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் அளிப்பதன் மூலம் கொரோனா அடுத்த அலை ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து.

வேக்சின் உற்பத்தி
இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதனால் வேக்சின் போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களிலும்கூட வேக்சின் போட மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நிற்கின்றனர். இருந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அனைவருக்கும் வேக்சின் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி குறைவான எண்ணிக்கையிலேயே வேக்சின் போடப்படுகிறது.

ஜூலை 15
வரும் ஜூலை 15ஆம் தேதி வரை பற்றாக்குறை தீராது என்பதால், அதன் பின்னரே வேக்சின் பணிகள் வேகெமடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் 20 லட்சம் பேருக்குத் தினசரி வேக்சின் போட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், தட்டுப்பாடு காரணமாகத் தினசரி ஐந்து முதல் ஆறு லட்சம் பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்படுகிறது.

என்ன காரணம்
தடுப்பூசி உற்பத்தி வேகப்படுத்தப்பட்டு உள்ளது என்றாலும் விநியோக சங்கிலியில் இருக்கும் சிக்கல் காரணமாக தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. அதைச் சரி செய்யப்பட்டவுடன் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் மிகப் பெரியளவில் வேக்சின் பணிகள் நடைபெறும் என அம்மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேக்சின்கள் மட்டுமே கொரோனாவை வெல்ல ஒரே ஆயுதம் என்பதால் வேக்சின் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications