கோவா சட்டசபை தேர்தல்: பாஜக வெல்லும்.. அப்போ திரிணாமுல்? டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு சொல்வது என்ன?
டெல்லி: கோவாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெல்ல வாய்ப்பிருப்பதாக டைம்ஸ் நவ்- வீட்டோ கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 இல் பஞ்சாபை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
பஞ்சாபிலும் பாஜக ஆட்சியை பிடிக்க போராடுகிறது. அது போல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் கோவாவில் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

எந்த கட்சி
இந்த நிலையில் 5 மாநிலங்களிலும் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து சில நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன்படி கோவாவில் பாஜக வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. கோவா சட்டசபை தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை என்பது குறித்து டைம்ஸ் நவ்- வீட்டோ இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாஜக 19 இடங்கள்
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெல்லுமாம். ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் சொல்கின்றன. மற்ற உதிரி கட்சிகள் 6 இடங்களில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் சொல்கின்றன. இந்த நிலையில் கோவாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை.

19 இடங்களில் பாஜக வெல்லும்
ஒரு வேளை கருத்து கணிப்புகளின்படி 19 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் உதிரி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறித்து சர்வே முடிவுகள் எதையும் சொல்லவில்லை. ஒரு வேளை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி விட்ட 6 இடங்களை திரிணமூல் காங்கிரஸ் வெல்லுமா என தெரியவில்லை.

யார் முதல்வர்
அது போல் தற்போது முதல்வராக உள்ள பிரமோத் ராவத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான தலைவராக அறியப்படுகிறது. இவர் முதல்வர் ஆக வேண்டும் என 24.50 சதவீதம் பேர் கருத்து கணிப்பில் வாக்களித்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 13 தொகுதிகளையும் காங்கிரஸ் 17 தொகுதிகளையும் பெற்ற போதிலும் உதிரி கட்சிகளின் துணையுடன் பாஜகவே ஆட்சி அமைத்தது.

முதல் முறையாக களம் காணும் திரிணமூல், ஆம் ஆத்மி
இந்த முறை முதல்முறையாக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் களம் காண்கிறது. எனவே கோவாவில் பல முனை போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேற்கு வங்கத்தை போன்ற ஒரு வளர்ச்சி கோவாவில் ஏற்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் மம்தா பானர்ஜி. கருத்து கணிப்பு படி பாஜக வெல்கிறதா இல்லை மாற்று கட்சிகள் ஆட்சிக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications