சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்..92.72% பேர் தேர்ச்சி..https://cbseresults.nic.in/ இணையதளத்தில் பார்க்கலாம்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.

சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆன நிலையில் இன்று வெளியாகியுள்ளன.14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதமாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 7% குறைவாகும்.

திருவனந்தபுரம் டாப் 1
98.83% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 98.16% விகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

ரிசல்ட் பார்ப்பது எப்படி?
சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். இதற்கான இணையதளம் cbse.nic.in , cbseresults.nic.in ஆகும். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

92.71% மாணவ மாணவிகள் தேர்ச்சி
நாடு முழுவதும் 92.71% மாணவ மாணவிகள் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 7 சதவிகிதம் குறைந்துள்ளது. 98.86% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. 98.16% தேர்ச்சி பெற்று பெங்களூரு மண்டலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சென்னை மண்டலம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

பொறியியல் படிக்க ஜூலை 27 வரை அவகாசம்
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியாகியுள்ளதால் பொறியியல் படிப்புகளில் சேர கால அவகாசம் அளிக்கப்பப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications