அது ஏன் நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் இறக்குமதி? சத்தியமங்கலம் காட்டில் இருப்பது சிறுத்தையில்லையா?
டெல்லி: இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், சிறுத்தைப் புலிகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்க்கலாம்.
மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விலங்குகளுக்குத் தான் பெரிய பாதிப்பு.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் மிருகங்கள் வாழும் பகுதிகள் மிக வேகமாகச் சுருங்கி வருகிறது. இதனால் பல விலங்குகள் ஆபத்தான நிலையில் உள்ளன.

சிறுத்தை
இந்தியாவில் அழியும் விலங்குகளைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுத்தைகளைப் பொருத்தவரை இந்தியாவில் கடந்த 1949ஆம் ஆண்டு கடைசி சிறுத்தை உயிரிழந்தது. சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை தான் கடைசியாக உயிரிழந்தது. இதையடுத்து நாட்டில் சிறுத்தை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

நமீபியா
இந்நிலையில், 74 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுத்தை இனத்தை மீண்டும் பெருக்க மத்திய அரசு நமீபியா உடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி நமீபியா நாட்டில் இருந்து ஐந்து பெண் சிறுத்தைகள், மூன்று ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது. இந்த சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி நாளை விடுவிப்பார்.

சிறுத்தைப் புலிகள்
அது சரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்.. சிறுத்தை நடமாட்டம் எனச் செய்திகள் வெளியாகும் நிலையில், 1949இலேயே சிறுத்தை அழிந்துவிட்டதாகக் கூறுவது குழப்பமாக இருக்கலாம். பார்க்கச் சிறுத்தை போலவே இருந்தாலும் நமது வனப்பகுதிகளில் உள்ளது சிறுத்தைப் புலி அதாவது leopards. இதற்கும் சிறுத்தைகளும் (Cheetahs) பல ஒற்றுமைகள் இருந்தாலும் அவை வேறு வேறு விலங்குகள்.

எங்கு
முதலில் நமது ஊர்களில் இருக்கும் சிறுத்தைப் புலிகள்.. அதான் Leopards பற்றிப் பார்க்கலாம். மரக்கிளையில் மிக எளிதாக ஏறும் இந்த சிறுத்தைப் புலிகள் பெரிய வகை பூனை இனத்தைச் சேர்ந்தது. சிறுத்தைகள் சிங்கம், புலிகள் மற்றும் ஜாகுவார்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. சிறுத்தை புலிகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, இந்தியா மற்றும் சீனாவில் காணப்படுகின்றன. இவையும் அழியும் ஆபத்தில் தான் உள்ளன.

வாழும் பகுதிகள்
பெரிய பூனை வகையின் மிகச்சிறிய உறுப்பினர்கள் தான் இந்த சிறுத்தைப் புலிகள். அதிகபட்சமாக 6 அடி வரை வளரக்கூடியவை. மழைக்காடுகள், பாலைவனங்கள், வனப்பகுதிகள் என இடத்திற்குத் தகுந்தது போல இவை தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும். இவை அதிகம் மரத்தில் தான் இருக்கும். இதன் தோல்கள் மறைந்து இருந்து வேட்டையாடுவதை எளிதாக்குகிறது. இந்தியாவில் மத்தியப் பிரதேசம், தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் அவை அதிகம் இருக்கும்.

சிறுத்தைகள்
அடுத்து அழிந்து போன சிறுத்தையைப் பற்றி பார்க்கலாம். இவை ஆப்பிரிக்காவில் தான் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. ஆப்பிரிக்காவில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் இவை, 3.3 அடி முதல் ஐந்து அடி வரை வளரும். இவை பொதுவாக 34 கிலோ முதல் 56 கிலோ வரை இருக்கும். ஆண் சிறுத்தை பெண் சிறுத்தையை விட அதிக எடை கொண்டதாக இருக்கும்.

அழிந்துவிட்டன
சிறுத்தைகள் பொதுவாக அதிகாலை அல்லது பிற்பகலில் மட்டுமே வேட்டையாடும். அவற்றின் இரைகளில் இம்பாலாக்கள் மற்றும் சிறிய மிருகங்கள் அடங்கும். சிறுத்தையின் மற்றொரு தனித்துவமான அம்சம் அதன் வால் ஆகும். அடர்த்தியான வாலில் 5 அல்லது 6 கருப்பான வளையங்கள் இருக்கும். இருப்பினும், சிறுத்தைகளைத் தனித்துவமாகக் காட்டுவது அவைகளின் கண்களிலிருந்து வாய் வரை இருக்கும் இரண்டு தனித்துவமான கருப்பு கோடுகள். வேட்டையாடும் போது சூரிய ஒளியில் இருந்து அவை சிறுத்தைகளைக் காப்பாற்றும். ஆசியச் சிறுத்தைகள் இந்தியாவில் காணப்பட்டன.. ஆனால் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை காரணமாகச் சிறுத்தைகள் முற்றிலுமாக அழிந்தன.

வேறுபாடுகள்
சிறுத்தைகளுக்கும் சிறுத்தைப் புலிகளுக்கும் உள்ள பொதுவான வேறுபாடு அவற்றின் தோலில் இருக்கும் புள்ளிகளின் வடிவமாகும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, இரண்டும் கரும்புள்ளிகளாகத் தோன்றினாலும், சிறுத்தை புலிகளின் புள்ளிகள் ரோஜாவைப் போலவும், சிறுத்தைகள் திடமான வட்டமான அல்லது ஓவல் வடிவ புள்ளிகளைக் கொண்டிருக்கும். இரண்டு பூனைகளுக்கு இடையிலான மற்றொரு வித்தியாசம் வேகம். சிறுத்தைகள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை. நிலத்தில் வாழும் விலங்குகளில் இவை தான் அதிவேகமாக ஓடக்கூடியது. ஆனால், ஒப்பீட்டளவில் அடை அதிகமாக இருக்கும் சிறுத்தைப் புலிகள் மணிக்கு 58 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ஓட முடியும்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications