வாவ்.. தெருநாய்களுக்கு உணவளிக்க தானியங்கி கருவி.. 10-ம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கி அசத்தல்!
டெல்லி: தெருநாய்கள் உணவின்றி பட்டினியால் தவிக்கும் நிலையில், அதற்கு உணவளிப்பதற்காக 10-ம் வகுப்பு மாணவர்கள் தானியங்கி கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். மாணவர்களின் கண்டுபிடிப்பை பார்த்து பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும் தெருநாய்களை காண முடியாத இடமே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு கிராமம், நகரம் என்று அனைத்து இடங்களிலும் தெருநாய்கள் வலம் வரும்.

தெருநாய்களின் நிலைமை
வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. நாயை வளர்க்கும் எஜமானர்கள், கறியும் சோறுமாக கவனித்து தங்கள் வீட்டில் ஒரு ஆளைப்போல பாவித்து வளர்த்து வருகின்றனர். ஆனால், இந்த தெரு நாய்களில் நிலமையோ அதோ கதிதான். எப்போது உணவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் அதற்கு இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் வீதிக்கு 10 தெருநாய்களையாவது நாம் காண முடியும். இந்த நாய்கள் எல்லாம் டீக்கடைகளை சுற்றியும், குப்பைத்தொட்டிகளையும் சுற்றியும் அடிக்கடி நிற்பதை காண முடியும்.

கொரோனாவால் நாய்களும் பாதிப்பு
இத்தகைய தெருநாய்களுக்கு பலர் உணவு அளிப்பதையும் காண முடியும். ஆனால், கொரோனா காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தெருநாய்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பசியும் பட்டினியுமாக தெருநாய்கள் வலம் வந்தன. சில ஆர்வலர்களோ சிறப்பு அனுமதியுடன் தெருநாய்களுக்கு உணவு அளித்தை நம்மால் காண முடிந்தது. 2021 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையின் படி இந்தியாவில் ஆதரவற்று இருக்கும் பூனைகள் மற்றும் நாய்களின் எண்ணிக்கை மட்டும் 8 கோடியாகும்.

அசத்தல் கண்டுபிடிப்பு
சர்வதேச நாய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில், ஷிவ் நாடார் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் தெருநாய்களின் பசியை போக்கும் வகையில் ஒரு அசத்தல் கருவியை கண்டுபிடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் இயங்கும் இந்த கருவிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்கள் மூலம் நாய்கள் வருவதை உணர்ந்து தானாக அதற்கு உணவுகளை அளிக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த கருவியில் உணவு பொருட்களை வைப்பது மட்டுமே...

கண் கலங்கினோம்
இந்த கருவியை கண்டுபிடித்த ஷாந்தனு முகர்ஜி, ஏக்னாஷ் அகர்வால் மற்றும் அர்ஜித் சின்க என்ற 10 ஆம் வகுப்பு மாணவர்கள், கொரோனா காலத்தில் தெருநாய்கள் எந்த அளவுக்கு பசி பட்டினியால் வாடின என்பதை கண்டு கலங்கியதாக குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்கள் பலரும் தெருநாய்களுக்கு உணவு வழங்கினாலும் ஒட்டுமொத்தமாக அவற்றின் பசியை போக்க கொரோனா காலத்தில் முடியவில்லை. எனவே, இதனை மனதில் கொண்ட இந்த இளம் மாணவர்கள், நாய்களுக்கு தானாக உணவு அளிக்கக்கூடிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இது தான் காரணம்
இதுபோன்று வரும் காலங்களில் பிரச்சினை ஏற்பட்டாலும் நாய்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று உணர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கருவியை கண்டறிந்துள்ளதாக அவர்கள் கூறினர். மேலும் அவர்கள் கூறுகையில், 'கேரளாவின் அடிமலதுரா கடற்கரையில் மூன்று இளைஞர்கள் நாய் ஒன்றை படகில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகின. ஈவு இரக்கமின்றி நாயை அடித்ததில் நாய் இறந்தே போனது. இதனைத்தொடர்ந்து #JusticeForBruno என்ற ஹெஷ்டேக் டிரெண்ட் ஆனது. #JusticeforBruno இயக்கம் உருவானது. இதுவே தங்களின் கண்டுபிடிப்புக்கு ஊக்கமாக இருந்தது' என்று மூன்று பேரும் தெரிவித்தனர்.

இதை பயன்படுத்துவது எப்படி?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட இந்த கருவியை பயன்படுத்துவது மிகவும் எளிது என்று விளக்கும் மாணவர்கள், நாம் செய்ய வேண்டியது எல்லாம் இந்த இயந்திரத்தை தெரு நாய்கள் அணுகும் வகையில் பொது இடத்தில் வைக்க வேண்டியதுதான் என்கின்றனர். இயந்திரத்தில் உணவு வைப்பதற்காக உள்ள இடத்தில் உணவுப்பொருட்களை வைத்தால் போதும், நாய்கள் வருவதை உணர்ந்து இந்த இயந்திரம் குறிப்பிட்ட அளவு உணவை நாய்களுக்கு போட்டு விடும் என்று தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு பாராட்டு
செல்லப்பிராணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட கருவிகளை தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் ஏக்னாஷ் என்ற மாணவர் தெரிவித்தார். இந்தக் கருவிகளின் விலை 9 ஆயிரம் முதல் 10 ஆயிரமாக இருக்கும் என்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், விலங்கு நல ஆர்வலர்களர்களுக்கு இந்த கருவி மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று தெரிவித்தனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications