டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாங்க் கோவிட் மீண்டும் வரப்போகிறது.. உடலில் என்னவெல்லாம் நடக்கும்.. இதுதான் அறிகுறி.. ஹு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: லாங்க் கோவிட் (long covid) எனப்படும் நீண்ட கால கொரோனா பாதிப்புகள் பலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil

    உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. பல நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. ஓமிக்ரான் கேஸ்கள் மைல்ட்டாக இருந்தாலும் மிக வேகமாக இது பரவி வருகிறது.

    இதனால் பல நாடுகளில் தினசரி கேஸ்கள் 3-4 லட்சம் வரை பதிவாகி வருகிறது. உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 3,478,918 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 641,038 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

     அமெரிக்காவில் அடங்காத கொரோனா.. இந்தியா, இத்தாலியில் தொடர்ந்து உச்சம்.. கட்டுக்கடங்காத கேஸ்கள் அமெரிக்காவில் அடங்காத கொரோனா.. இந்தியா, இத்தாலியில் தொடர்ந்து உச்சம்.. கட்டுக்கடங்காத கேஸ்கள்

    கொரோனா

    கொரோனா

    ஓமிக்ரான் பரவலால் லாங்க் கோவிட் எனப்படும் நீண்ட கால கொரோனா பாதிப்புகள் பலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள "லாங்க் கோவிட் எஸ்ஓஎஸ்" அறிக்கையில் லாங்க் கோவிட் என்பது ஒருவருக்கு கொரோனா வந்து அதில் இருந்து குணமடைந்தாலும் அவருக்கு சில அறிகுறிகள் பல காலம் இருக்கும். சில மோசமான அறிகுறிகள் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும்.

    ஓமிக்ரான் கேஸ்கள்

    ஓமிக்ரான் கேஸ்கள்

    சில பின்விளைவுகளும் பல மாதங்களுக்கு நீடிக்கும். பாதிப்புகள் குறையாமல் தொடர்ந்து நீடிப்பதே லாங்க் கோவிட். ஆனால் பல நாடுகள் லாங்க் கோவிட் என்ற ஒன்று இருப்பதை மறந்துவிட்டனர். கொரோனாவோடு வாழ பழக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு லாங்க் கோவிட் என்பதை மறந்துவிட்டனர். லாங்க் கோவிட் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இருக்க வேண்டும்.

    லாங்க் கோவிட்

    லாங்க் கோவிட்

    இது மோசமானது. தினசரி கேஸ்கள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் பல நாடுகள் லாங்க் கோவிட் என்பதன் தீவிரத்தை உணர மறந்துவிட்டனர். இதை பற்றி ஊடகங்களும், அரசு நிறுவனங்களும் எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு மைல்ட் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட லாங்க் கோவிட் அதனால் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதை பற்றி உலக நாடுகள் மேலும் ஆராய வேண்டும்.

    சுவை இழப்பு

    சுவை இழப்பு

    இது தொடர்பான முறையான வழிகாட்டுதல்களை ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக லாங்க் கோவிட் ஏற்படும் நபர்களுக்கு வாசனை இழப்பும், சுவை இழப்பும் நீண்ட காலம் இருக்கலாம். அதாவது கொரோனாவில் இருந்து விடுபட்ட பின்பும் நீண்ட காலம் இந்த பாதிப்பு இருக்கலாம். லாங்க் கோவிட் இருப்பதன் மிக முக்கியமான அறிகுறி இது. பொதுவாக கொரோனாவில் இருந்து விடுபட்ட 70 சதவிகிதம் பேருக்கு வாசனை, சுவை இழப்பு ஏற்படும்.

    அறிகுறிகள்

    அறிகுறிகள்

    ஆனால் இதில் பெரும்பாலானோருக்கு குணமடைந்ததும் மீண்டும் வாசனை, சுவை தெரியும். சிலருக்கு தெரியாமல் தொடர்ந்து அறிகுறிகள் நீடிக்கும். அவர்களுக்கு லாங்க் கோவிட் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. கொரோனாவில் இருந்து விடுப்பட்டு பல மாதங்கள் கழித்து வாசனை வரவில்லை என்றால் அதை parosmia என்று கூறுவார்கள். சிலருக்கு வாசனைகள் வித்தியாசமாக இருக்கும். இதுவும் கூட லாங்க் கோவிட் அறிகுறிகள்தான்.

    ஓமிக்ரான் லாங்க் கோவிட்

    ஓமிக்ரான் லாங்க் கோவிட்

    அதேபோல் சிலருக்கு கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்பும் உடல் சோர்வு பல மாதங்கள் இருக்கலாம், இருமல் நீண்ட காலம் நீடிக்கலாம், மனக்குழப்பம், மன அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதுவும் லாங்க் கோவிட் அறிகுறிகள்தான் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஓமிக்ரான் மூலம் ஏற்படும் லாங்க் கோவிட் அறிகுறிகள் இப்போதைக்கு சொல்ல முடியாது. வரும் நாட்களில் இதை பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Coronavirus and Omicron: WHO advices about the Long Covid and its symptoms among people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X