டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன செய்வது.. ரொம்ப கஷ்டம்.. கொரோனாவிற்கு எதிராக திணறும் மகாராஷ்டிரா, கேரளா.. திடுக் பின்னணி!

இந்தியாவில் கொரோனாவை உடனே கட்டுப்படுத்தவில்லை என்றால் ஏப்ரலில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அங்கு தினம்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 440 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

மொத்தமாக கேரளாவில் 95 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்தவர்களின் மாநிலத்தில் கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கேரளா கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை

மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா இரண்டிலும் வெளியே செல்லும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது அங்கு வைரஸ் பரவ முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அங்கு மக்களை உள்ளேயே இருக்கும் படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் இப்போதும் பீச்களில் மக்கள் கூடி வருகிறார்கள். கேரளாவில் பிக்பாஸ் பிரபலங்களை பார்க்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் மக்கள் வெளியே வந்த சம்பவம் எல்லாம் நடந்தது.

எத்தனை பேருக்கு சோதனை

எத்தனை பேருக்கு சோதனை

அதேபோல் அங்கு கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிப்பது கடினம் ஆகியுள்ளது. இதை காண்டாக்ட் டிரெஸ் முறை என்று கூறுவார்கள். அதாவது கொரோனா பாதித்த நபர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்களோ அவர்களை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் இதை கேரளா அரசு தீவிரமாக செய்து வந்தது. ஆனால் இதில் தற்போது அம்மாநிலம் திணற தொடங்கி உள்ளது.

மிக கஷ்டம்

மிக கஷ்டம்

இதற்கு நிறைய காரணம் சொல்லப்படுகிறது.

நோயாளிகள் பொய் சொல்வது. தாங்கள் சந்தித்த நபர்களின் பட்டியலை முழுமையாக சொல்லாமல் மறைப்பது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நோயாளிகள் தாங்கள் சந்தித்த நபர்களை முழுமையாக பட்டியலிட முடியாது. இதனால் அவருடன் தொடர்பு கொண்ட எல்லா நபர்களையும் கண்டுபிடிக்க முடியாது.

சில நோயாளிகள் 3000 பேர் வரை தொடர்பு கொண்டுள்ளதால் அவர்கள் எல்லோரையும் கண்டுபிடிக்க முடியாது.

மக்கள் கேட்கவில்லை

மக்கள் கேட்கவில்லை

கேரளாவில் 60 ஆயிரம் பேர் வரை வீட்டில் உள்ளனர். அதேபோல் மகாராஷ்டிராவில் 40 ஆயிரம் பேர் வரை வீட்டில் உள்ளனர். ஆனால் இதில் சிலர் வீட்டு காவலை மதிக்காமல் வெளியே செல்லும் சம்பவங்கள் நடக்கிறது. அரசின் கட்டுப்பாட்டை மக்கள் கேட்கவில்லை. இவர்கள் இப்படி வெளியே சுற்றுவதால் கொரோனா பரவுகிறது.

டெஸ்ட் தாமதம்

டெஸ்ட் தாமதம்

அதேபோல் இந்தியாவில் கொரோனா டெஸ்ட் மிகவும் தாமதமாக செய்யப்படுகிறது. ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால்தான் அவர்கள் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தனிமைப்படுத்துவதா என்று முடிவு செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் மிக குறைவான வேகத்தில்தான் கொரோனா டெஸ்ட் செய்யப்படுகிறது. இதனால் மக்களை தனிமைப்படுத்துவதில் பெரிய அளவில் தாமதம் ஏற்படுகிறது.

விமான நிலையம் வருகை அதிகம்

விமான நிலையம் வருகை அதிகம்

அதேபோல் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் சில நாட்கள் முன்பு வரை அதிக வெளிநாட்டு பயணிகள் வந்தனர். கேரளாவிற்கு அரபு நாடுகளில் இருந்து பயணிகள் பலர் வந்தனர். இவர்களில் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகாராஷ்டிராவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் பலர் வந்தனர். இதுவும் கூட கொரோனா பரவ முக்கிய காரணம் ஆகும்.

English summary
Coronavirus: The real reason why Maharashtra and Kerala is failing in Corona fight?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X