இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,907 பேருக்கு கொரோனா.. 251 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,907 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரமாக இந்தியாவில் தொடர்ந்து 13 ஆயிரத்திற்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 3,42,85,612 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 3,36,61,339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,152 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
1,52,606 பேர் தற்போது இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் இந்தியாவில் பலியானார்கள். 4,58,470 பேர் இதுவரை இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து 1100க்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 27,02,623 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1009 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,116 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,55,015 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 11,492 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
தமிழ்நாட்டில் கேஸ்கள் தொடர்ந்து குறைந்தாலும் கேரளாவில் இன்னும் கேஸ்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் நேற்று கேரளாவில் மட்டும் புதிதாக 529 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவை கடந்த வாரம் திடீரென அதிகரித்த கேஸ்கள் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7167 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 49,68,657 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 74,529 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 31,681 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,57,181 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250க்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,88,333 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 292 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,082 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,41,578 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,644 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,11,078 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1201 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 16,658 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,216 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,50,585 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 20 பேர் பலியாகி உள்ளனர்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications