டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் குறைந்த கொரோனா பாதிப்பு - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 99,023 பேராக குறைவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,023 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 547 நாட்களில் பதிவான குறைவான அளவாகும்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து 10,207 பேர் குணமாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,023 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 547 நாட்களில் பதிவான குறைவான அளவாகும்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,954 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 8,309 ஆகவும், நேற்று 6,990 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,723 பேருக்கு தொற்று உறுதியானது.

COVID-19 Update indias Active case 99,023

கடந்த மே மாதத்தில் பரவல் வேகம் உச்சம் தொட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த 6 மாதமாக பாதிப்பு தொடர்ந்து குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்து கட்டுக்குள் உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் 3.10 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் 5.20 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இதன்மூலம் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா பாதிப்பு மேலும் 40 சதவீதம் குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரேநாளில் கொரோனாவிலிருந்து 10,207 பேர் குணமாகியுள்ள நிலையில், இதன் மூலம் கொரோனாவால் குணமானோர் மொத்த எண்ணிக்கை 3,40,028,506 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,023 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 547 நாட்களில் குறைவான அளவாகும்.

கடந்த ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 190 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இன்று கொரோனா பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,69,227 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை1,24,10,86,850 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 80,98,716 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 11,08,467 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64.24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்! தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்!

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil

    இதனிடையே உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியா, போஸ்வானா, பிரேசில், வங்காளதேசம், ஹாங்காங், இஸ்ரேல் உள்பட பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. பல நாடுகளில் இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தியாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    English summary
    COVID-19 Update : india's Active caseload less than a lakh after 547 days; currently stands at 99,023 active cases. 124.10 crore vaccine doses have been administered so far under Nationwide Vaccination Drive
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X