டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி : கிரிப்டோகரன்சி விவகாரத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்றும், இளைஞர்களை பாதிக்கும் என்பதால் தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்

காணொலி மூலம் சிட்னி மாநாடு

காணொலி மூலம் சிட்னி மாநாடு

காணொலிக் காட்சி மூலம் சிட்னி மாநாட்டில் 'இந்திய தொழில்நுட்பம்: பரிணாமம் மற்றும் புரட்சி என்ற தலைப்பில் பேசிய மோடி, டிஜிட்டல் கரன்சியில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் செய்த முதலீட்டை கண்காணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

டிஜிட்டல் உலகில் புதிய மாற்றம்

டிஜிட்டல் உலகில் புதிய மாற்றம்

டிஜிட்டல் உலகம், நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் மாற்றிவிட்டது. அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்றவற்றிற்கு புதிய வரையறையை தந்துள்ளது. நிர்வாகம், சட்டம், நெறிமுறைகள், உரிமை, இறையாண்மை, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் கேள்விகளை டிஜிட்டல் உலகம் எழுப்புகிறது. சர்வதேச போட்டி, அதிகாரம் மற்றும் தலைமை ஆகியவற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது டிஜிட்டல் உலகம்.

ஒருங்கிணைப்புத் தேவை

ஒருங்கிணைப்புத் தேவை

ஆனாலும் டிஜிட்டல்மயமாக்கத்தால் சைபர்துறை முதல் விண்வெளி வரை புதிய அச்சுறுத்தல்கள், மோதல்கள் ஆகியவற்றை எதிர்கொள்கிறோம். உலகளாவிய போட்டிக்கு, தொழில்நுட்பம் முக்கிய கருவியாக விளங்குகின்றது. கிரிப்டோகரன்சி அல்லது பிட்காயின் விவகாரத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும். இளைஞர்களை பாதிக்கும் என்பதால் கிரிப்டோ கரன்ஸி தவறானவர்கள் கையில் சென்றுவிடாமல் தடுப்பதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும்.

 6 லட்சம் கிராமங்களில் பிராட்பேன்ட்

6 லட்சம் கிராமங்களில் பிராட்பேன்ட்

தொழில்நுட்ப வளர்ச்சி.இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தின் அளவு ஆகியவற்றோடு பிண்ணிப் பினைந்துள்ளது. அதற்குக் காரணம் இளைஞர்கள் மட்டுமே. 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தனித்துவமான டிஜிட்டல் முறையை இந்தியாவில் கையாளுகின்றனர். இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

 சேவை

சேவை

தொழில் மற்றும் சேவை, விவசாயம் கூட டிஜிட்டல் உலகிற்கு மாற்றப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை உள்பட அனைத்து முக்கியமான விவகாரங்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து வருகிறது. வெளிப்படைத்தன்மையே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். இதனை, சமூக விரோத சக்திகள் தவறாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Cryptocurrencies should not end up in the wrong hand says PM Modi in Sydney meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X