இந்தியாவில் தினசரி கொரோனா புதிய உச்சம்: 1,41,986 பேர் பாதிப்பு -285 பேர் மரணம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. 285 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,41,986 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் இரண்டாவது அலையின் வேகம் மிகத்தீவிரமாக இருந்தது. நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் அதிகரித்தது. உயிரிழப்புகளும் அதிகரித்தது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்தததால் கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வந்த நிலையில் மளமளவென உயர்ந்து தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதிதாக 1,41,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,53,68,372 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,895 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,12,740 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 97.30% ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் 285 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,72,169 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் 1,50,61,92,903 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 90,59,360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications