இப்படி மட்டும் நடந்தால்.. புதிய சாதனை படைப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்.. புது டெல்லியில் முன்னிலை!
Recommended Video
டெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இவர் டெல்லியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அங்கு ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 44 இடங்களில் முன்னிலை, பாஜக 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இவர் டெல்லியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
பாஜகவின் சுனில் யாதவ் இங்கு மிக மோசமான பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இங்கு பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்று சாதிக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது. இவர் எம்எல்ஏக்களில் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றவர் என்ற சாதனையை படைப்பாரா என்று ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications