'நீ எவ்ளோ அழுதாலும் கவலையில்லை.." தற்கொலை செய்து கொண்ட மாணவரை அவமானப்படுத்திய ஆசிரியர்! ஷாக்
டெல்லி: ஓராண்டாகப் பள்ளியில் ஆசிரியர் மிக மோசமாக நடத்தியதால் மன உளைச்சலில் 16 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவரின் தந்தையும் சில பகீர் கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்த காலத்தில் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறை வெகுவாக மாறியிருக்கிறது. ஆனாலும் கூட மாணவர்கள் பல்வேறு வழிகளில் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். பல நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துணையாக இருந்தாலும் கூட சில நேரங்களில்.. ஆசிரியர்கள் செய்யும் செயலே கூட மாணவர்களுக்கு எதிராகப் போய்விடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது.

தற்கொலை
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், சென்ட்ரல் டெல்லியில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அன்று மதியம் பள்ளி முடிந்ததும் நேராக மெட்ரோ நிலையத்திற்குச் சென்று அந்த மாணவர் அங்குத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவர், 16 வயதான ஷௌர்யா பாட்டில் என்று அடையாளம் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த 16 வயது சிறுவனின் ஸ்கூல் பேக்கை எடுத்து சோதனை செய்தனர். அதில் சிறுவன் கைப்பட எழுதியிருந்த கடிதம் கிடைத்தது..
ஆசிரியர்கள்
டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவரான ஷௌர்யா பாட்டிலை கடந்த ஓராண்டாகவே ஆசிரியர்கள் மோசமாக நடத்தியுள்ளனர். அவர் மற்ற மாணவர்கள் முன்பு வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இது தொடர்பாகப் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடமும் புகாரளித்துள்ளனர். இதனால் எங்குத் தன்னை பள்ளியில் இருந்து தூக்கிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே சிறுவன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அழுதாலும் கவலையில்லை
இது தொடர்பாக ஷௌர்யாவின் தந்தை பிரதீப் பாட்டீல் கூறுகையில், "அவர் தற்கொலை செய்து கொண்ட அன்று டான்ஸ் பயிற்சி நடந்துள்ளது. அப்போது எனது மகன் மேடையில் தடுமாறி விழுந்துள்ளான். அதை பார்த்த ஆசிரியர் சமாதானப்படுத்தாமல் பகிரங்கமாகத் திட்டி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் அவன் அழுதுள்ளான். அப்போதும் ஒரு ஆசிரியர்.. நீ எவ்வளவு வேண்டுமானாலும் அழுதுகொள், எனக்குக் கவலையில்லை என்று சொல்லியிருக்கிறார்.
என் மகன் இறந்த பிறகு, பள்ளி முதல்வர் எனக்குக் கால் செய்தார். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், நாங்கள் செய்கிறோம் என்றார். என் மகன் எனக்கு மீண்டும் வேண்டும் என்றேன். கடந்த ஓராண்டாகவே இந்த பிரச்சனை இருக்கிறது. இது குறித்து நான் பள்ளி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்துள்ளான். ஆனால், அப்போதெல்லாம் எனது மகனை தான் குறை சொல்வார்கள்.
பகீர் குற்றச்சாட்டு
எனது மகன் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. கணித மார்க் குறைவாக இருக்கிறது என்றும் எனது மகனுக்கு படிப்பில் ஆர்வமே இல்லை எனச் சொல்வார்கள். அவன் சின்ன பையன். அந்த பருவத்தில் அப்படி தான் இருப்பார்கள். இதற்காக ஆசிரியர்கள் செயலை நியாயப்படுத்த முடியாது. சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு கூட பள்ளி நிர்வாகத்திடம் பேசியபோது டிசி கொடுத்து விடுவதாக அச்சுறுத்தினர்" என்றார்.
ஷௌர்யா வழக்கமாகப் பள்ளிக்கு காரில் தான் செல்வாராம்.. இருப்பினும், அன்றைய தினம் வீட்டின் பின் வாசல் வழியாக மெட்ரோ நிலையத்திற்குப் போய் இருக்கிறார். ஷௌர்யாவின் தற்கொலைக் கடிதத்தில் மூன்று ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான். மேலும், குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications