என்டிடிவி யை கைப்பற்றினாரா அதானி? 29% பங்குகளை வாங்கியது எப்படி? உண்மை பின்னணி
டெல்லி: இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியான என்டிடிவியை அதானி குழுமம் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்த பின்னணி காண்போம்.
30 ஆண்டுகளாக செய்தி ஊடகத் துறையில் இயங்கி வரும் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியாக என்டிடிவி இருந்து வருகிறது. என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி பிராஃபிட் ஆகிய 3 சேனல்கள் இயங்கி வருகின்றன.
பிரனாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் இந்த தொலைக்காட்சியை நடத்தி வருகின்றனர். அதில் 29% பங்குகள் அவர்களின் ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிக் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்திடம் இருந்தன.

ரூ.403.85 கோடி கடன்
இந்த நிலையில், கடந்த 2009 - 2010 நிதியாண்டு காலகட்டத்தில் விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிட்டட் (VCPL) என்ற நிறுவனத்திடம் ஆர்.ஆர்.பி.ஆர். நிறுவனம் ரூ.403.85 கோடி கடன் வாங்கி இருக்கிறது. இதனை முறையான நேரத்தில் திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனத்தின் 29% பங்குகள் விசிபிஎல் வசம் வந்திருக்கிறது.

அபராதம்
இதற்கு இடையே, கடன் பெற்றதில் விதிமீறலில் ஈடுபட்டதாக என்டிடிவி நிறுவனர்கள் பிரனாய் ராய், ராதிகா ராய் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செபி பிரனாய் ராய்க்கு தடை விதித்ததுடன், அபராதமும் விதித்தது. இதனை எதிர்த்து, பத்திர மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) இடம் என்டிடிவி முறையீடு செய்தது.

தடை நீக்கம்
மனுவை விசாரித்த SAT, "என்டிடிவி கடன் ஒப்பந்தத்தை வெளிப்படுத்தாதது தவறு. ஆனாலும் செபி விதித்த அபராதம் மிக அதிகம். அத்துடன் முதலீட்டார்களை ஏமாற்றும் வகையில் எதுவும் நடைபெறவில்லை." என்று கூறி, அபராதத்தை கணிசமான அளவுக்கு குறைத்தது. அத்துடன் பிரனாய் ராய் மீது விதிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்பட்டது.

அதானி நிறுவனம்
இந்த நிலையில் தொழிலதிபர் கவுதம் அதானியின் ஏ.எம்.ஜி மீடியா நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம், என்டிடிவியில் 29% பங்குகளை வைத்திருக்கும் VCPL என்ற நிறுவனத்தின் 100% பங்குகளையும் ரூ.113.7 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இதன் மூலம் என்டிடிவியின் 29% பங்குகள் அதானி வசமாகி இருக்கின்றன. இதை வைத்தே அவர் என்டிடிவியை வாங்கி இருப்பதாக கூறுகிறார்கள்.

26% பங்குகள்
மேலும் என்டிடிவியின் மேலும் 26% பங்குகளை தலா ரூ.294க்கு வாங்க தயாராக இருப்பதாக அதானி குழுமமும் விசிபிஎல் நிறுவனமும் அறிவித்துள்ளது. அதாவது ரூ.493 கோடிக்கு பங்குகளை வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த 26% பங்குகள் அதானி வசம் சென்றால் என்டிடிவி அவர் வசம் சென்றுவிடும்.

என்டிடிவி விளக்கம்
இதுகுறித்து என்டிடிவி அளித்துள்ள விளக்கத்தில், தொலைக்காட்சி நிறுவனர்களின் ஒப்புதல் ஏதுமின்றி பங்குகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. விசிபிஎல் நிறுவனம் எங்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எங்கள் இதயமான ஊடகத்துறையில் எதையும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் பத்திரிகை துறைக்காக பெருமையுடன் நிற்போம். 61% பங்குகள் எங்கள் வசமே இருக்கிறது". என்று குறிப்பிட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications