டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 4வது அலை? அறிகுறியே இல்லை என அடித்துச் சொல்லும் ஐசிஎம்ஆர்! அப்போ என்னதான் பிரச்சினை?

Google Oneindia Tamil News

டெல்லி : சமீபத்தில் கிடைத்துள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களின்படி இந்தியாவின் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகரித்துள்ளது எனவும், இது 4 வது அலையின் தொடக்கம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.

இந்தியா சரிவில் இருந்து கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடந்த நில வாரங்களில் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக நாட்டின் தலைநகரான டெல்லியில் 1,607 பேருக்கு தொற்று உறுதியானது. அடுத்ததாக ஹரியானாவில் 624, கேரளாவில் 412, உத்தரபிரதேசத்தில் 293என புதிதாக பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவலின்போது மோடி செய்த காரியம்... நோபல் பரிசே தரலாம் என புகழ்ந்த மும்பை பங்குச்சந்தை தலைவர் கொரோனா பரவலின்போது மோடி செய்த காரியம்... நோபல் பரிசே தரலாம் என புகழ்ந்த மும்பை பங்குச்சந்தை தலைவர்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதுதவிர நேற்று மகாராஷ்டிராவில் 2 பேர், டெல்லியில் 2 பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என மேலும் 50 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,23,803 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து மேலும் 2,755 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 377 ஆக உயர்ந்தது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், கொரோனா 4வது அலை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியானது.

ஐசிஎம்ஆர் விளக்கம்

ஐசிஎம்ஆர் விளக்கம்

ஆனால் அதனை தற்போது ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது. அதாவது, சமீபத்தில் கிடைத்துள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களின்படி இந்தியாவின் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகரித்துள்ளது எனவும், இது 4வது அலையின் தொடக்கம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.

சோதனை எண்ணிக்கை

சோதனை எண்ணிக்கை

நாட்டின் சில பிராந்தியங்களில் கொரோனா நேர்மறை விகிதங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், இந்த அதிகரிப்புகள் பெரும்பாலும் குறைந்த அளவிலான சோதனை காரணமாக இருப்பதாக டாக்டர் பாண்டா கூறினார். டெல்லியின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர், அங்கு அறிகுறி உள்ளவர்களிடையே சோதனை அதிகரித்தவுடன், சோதனை நேர்மறை விகிதம் 7%லிருந்து 5% க்கும் குறைவாக இருந்தது.

கொரோனா 4வது அலை

கொரோனா 4வது அலை

"எனவே, ஒரு மாவட்டம் அல்லது ஒரு மாநிலத்தில் சோதனை செயல்திறன் போதுமான அளவில் இருக்கும்போது மற்றும் வரையறுக்கப்பட்ட மக்கள்தொகைக்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையை அடையும்போது நேர்மறைத்தன்மை கணக்கிடப்பட வேண்டும் என்று டாக்டர் பாண்டா கூறினார். இதனால் உள்ளூர் நிலவரங்களை வைத்து கொரோனா 4வது அலையை கணக்கிட முடியாது என்றார்.

அறிகுறி இல்லை

அறிகுறி இல்லை

சில மாவட்டங்களில் மட்டும் கேஸ்லோடுகளில் சிறிய அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். "நாம் பார்ப்பது சில சிக்கல்களை மட்டும் தானே தவிர, கொரோனாவின் புதிய மாறுபாட்டால் ஏற்படும் புதிய கொரோனா அலையின் தொடக்கம் அல்ல. இந்த ஏற்றத்தாழ்வுகளால் தற்போது சில பகுதிகளுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன, நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக கொரோனா பரவவில்லை,இதுவரை 4வது எழுச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை" என்றும் பாண்டா கூறினார்.

English summary
Dr Samir Panda, Additional Director General, Medical Research Council of India, said that according to recent reports of corona infection, corona has increased only in some districts of India and this is not the beginning of the 4th wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X