மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு மீண்டும் தள்ளிப்போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதி நாளை (மார்ச் 15) இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்ற தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிப்பு என்பது மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மார்ச் 15ம் தேதிக்கு பிறகு மார்ச் 16 அல்லது ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போக சில முக்கிய காரணங்கள் உள்ளன.
முதல் காரணம்
அதாவது தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் உள்ளிட்ட இடங்களில் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் SIR நடவடிக்கைக்கு பிறகு இறுதி வாக்காளர்கள் பட்டியல் பிப்ரவரி 28 ம் தேதி தான் வெளியானது.
மேலும் விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்கும் வகையிலான மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 15 (நாளை) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது முதல் காரணமாகும்.
2வது மற்றும் 3வது காரணம்
அதேபோல் நாளை மாநிலங்களவைக்கான தேர்தல் (ராஜ்யசபா) தேர்தல் நடைபெற உள்ளது. இது 2வது காரணமாகும். அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இப்படியான சூழலில் தேர்தல் தேதியை அறிவிப்பது சட்ட பிரச்சனையை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இது 3வது காரணமாகும்.
தமிழகம் - புதுச்சேரியில் ஒரே கட்ட தேர்தல்
இதனால் தான் தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 16ம் தேதிக்கு பிறகு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் இந்த முறை குறைந்த கட்டங்களாக விரைவாக தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கம்போல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மாறாக அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
தேர்தல் சமயத்தில் மேற்கு வங்கத்தில் பல பிரச்சனைகள் வெடிக்கும். இதானல் அங்கு பாதுகாப்பு பணிகள் அதிகரித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரை விட அதிகளவில் மத்திய காவல் படையினர் மேற்கு வங்கத்தில் குவிக்கப்பட உள்ளனர்.
மத்திய ஆயுதக் காவல் படையினரின் (CAPFs) 2024 ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் 1.4 லட்சம் (1,500 கம்பெனிகள்) பேர் பயன்படுத்தப்பட்டனர். தற்போது மேற்கு வங்கத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 45,000 (500 கம்பெனிகள்) CAPF காவலர்கள் முன்கூட்டியே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
மருமகள் சவுமியாவுக்கு எதிராக வேட்பாளரை அறிவித்த ராமதாஸ்.. வெளியானது 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
மாஜி அமைச்சர் டூ முன்னாள் எம்பி வரை.. 23 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார் சசிகலா.. லிஸ்ட் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு.. எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டி? வெளியான லிஸ்ட் -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன்










Click it and Unblock the Notifications