டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு.. கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படவில்லை

Google Oneindia Tamil News

டெல்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றுக்கு இன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரசின் தாக்கம் உலகில் கொஞ்சுமும் குறையவில்லை. உயிரிழப்பு மட்டுமே குறைந்துள்ளது. இந்த சூழலில் பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளளது.

Emergency Use Approval Not Granted to Oxford-AstraZeneca and Bharat Biotech Vaccines, Say Sources

இதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உருமாறி கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பிரிட்டன் உடன் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பபட்டுள்ளது. எனினும்
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோய்த்தொற்றுகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுவிரைவில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறது.

இதுவரையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை மத்திய அரசிடம் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசு அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது மலிவு விலையில் சீரம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை வழங்க முடியும் என்று பெரும் நம்பிக்கையில் உள்ளது..

இதுவரை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் உடன் இந்திய அரசு இன்னும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், சீரம் நிறுவனம் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதாகவும், பின்னர் தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் கூறி வருகிறது.

இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றுக்கு இன்று கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கூடுதல் தகவல் கேட்கப்பட்டுள்ளதால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்த நிலையில், இந்தியா இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. சீரம் நிறுவனத்தின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரக் கோரிக்கையை பரிசீலிக்க ஜனவரி 1 ஆம் தேதி நிபுணர் குழு மீண்டும் கூட உள்ளது. அப்போது ஒப்புதல் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
The Serum Institute of India and Bharat Biotech were not granted emergency use authorization (EUA) for their Covid-19 vaccines today, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X