டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சுக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்குவது இல்லை என்றும் அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    BJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்

    பேஸ்புக் நிறுவனம் மீது கடந்த சில வாரங்களாக அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்துவது இல்லை. பொய்யான தகவல்களை பேஸ்புக் கட்டுப்படுத்த தவறிவிட்டது.

    வன்முறைகளை தூண்டும் வகையில் போடப்படும் பேஸ்புக் போஸ்டுகளுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் செயல்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

    6 மாதங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு6 மாதங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு

    என்ன புகார்

    என்ன புகார்

    அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது. அதேபோல் பாஜக மட்டுமின்று வேறு மூன்று இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் போஸ்டுகளையும் பேஸ்புக் அனுமதிக்கிறது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இந்தியாவில் அரசை எதிர்த்தால் தங்களின் மார்க்கெட் மோசமாகிவிடும் என்று பேஸ்புக் மௌனம் காப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. "Facebook's Hate-Speech Rules Collide With Indian Politics" என்ற பெயரில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் பேஸ்புக் குழுவில் இருக்கும் சில முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக இதில் கூறப்பட்டுள்ளது.

    தனியாக நடந்தது

    தனியாக நடந்தது

    வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை இந்திய பேஸ்புக் அதிகாரிகள் வேண்டும் என்றே நீக்குவது இல்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக வால் ஸ்டிரீட் ஜர்னல் பாஜகவின் தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா சிங்கை குற்றஞ்சாட்டி உள்ளது. இவரின் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போஸ்ட்களை புகார் அளித்தும் பேஸ்புக் நீக்கியது இல்லை, என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் குறிப்பிட்டு உள்ளது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    பேஸ்புக்கில் இருக்கும் சிலர் தலையிட்டு இவரின் வெறுப்பு பேச்சுக்களை நீக்க கூடாது என்று கூறியதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. பாஜகவிற்கு எதிராக செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய பேஸ்புக் அதிகாரிகள் சிலர் குறிப்பிட்டதாக கூறுகிறார்கள். பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    வேறு என்ன சொன்னார்

    வேறு என்ன சொன்னார்

    அதேபோல் இவர் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழத்த வேண்டும் என்றும் என்றும் கூறி உள்ளார். ஆனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது. இவரின் கணக்கை நீக்க கூடாது என்று இந்திய பேஸ்புக் குழுவில் இருக்கும் சிலர் அழுத்தம் கொடுத்து , பேஸ்புக் நிறுவன முடிவை மாற்றி உள்ளனர் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இவரின் சில பேஸ்புக் போஸ்ட்களை மட்டும் பேஸ்புக் நீக்கி உள்ளது.

    நீக்கிவிட்டது

    நீக்கிவிட்டது

    அதேபோல் பாஜகவின் கபில் மிஸ்ரா, அனந்த குமார் ஹெக்டே போன்ற சில தலைவர்கள் செய்யும் போஸ்ட்களை பேஸ்புக் நீக்குவது இல்லை என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. கபில் மிஸ்ராவின் போஸ்ட் டெல்லி கலவரத்திற்கு வழி வகுத்தது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டு பேசியதும் கூட குறிப்பிடத்தக்கது. கலவரத்தை தூண்டும் வகையில் இவர் பேசிய வீடியோவை பேஸ்புக் நிறுவனம் நீக்கிவிட்டது. ஆனால் மற்ற போஸ்ட்கள் நீக்கப்படவில்லை.

    ஏன் நீக்குவது இல்லை

    ஏன் நீக்குவது இல்லை

    இந்தியாவில் இருக்கும் ஆளும் கட்சியை பகைத்துக் கொண்டால், பேஸ்புக் நிறுவனத்திற்கு சிக்கலாகும் என்று இந்த நிறுவனம், பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர்களின் வெறுப்பு பேச்சுக்கள் எதையும் நீக்குவது இல்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது. ஆனால் பேஸ்புக் நிறுவனம் இந்த புகார்களை மறுத்துள்ளது. நாங்கள் அனைத்து வெறுப்பு பேச்சுக்களையும் ஒன்றாகவே அணுகுகிறோம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

    English summary
    Facebook turn blind against BJP in hate speeches says Wall Street Journal in their article.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X