மத்திய பாஜக ஆட்சியில் ரூ2,000 கள்ள நோட்டு 54%; ரூ500 கள்ள நோட்டு 102% அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி ஷாக்
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ரூ2,000 கள்ள நோட்டு 54%; கள்ள நோட்டு 102% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2016-ம் ஆண்டு பிரதமர் மோடி நள்ளிரவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு ஒட்டுமொத்தமாக இந்தியாவையே நிலைகுலைய வைத்தது. ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்பதுதான் அறிவிப்பு.

ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் பட்டபாடு சொல்லி மாளாதது. பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் காத்திருந்து மாண்டவர்கள் எத்த்னையோ பேர்... அன்று வங்கிகள், ஏடிஎம்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் இன்னமும் பொதுமக்களுக்கு கழுத்தைப் பிடிப்பவையாகவே இருக்கின்றன.
மத்திய அரசின் இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையானது தோல்வி அடைந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தற்போதும் கூட மத்திய அரசு அறிமுகம் செய்த ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் குறைந்துவிட்டன. மத்திய அரசே இதை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது ரூ500, ரூ200 நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் நாட்டில் கடந்த நிதி ஆண்டில் ரு500 கள்ள நோட்டு புழக்கம் 102% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் ரூ2,000 கள்ள நோட்டு புழக்கம் 54% அதிகரித்திருக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரைன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு?












Click it and Unblock the Notifications