அமெரிக்கா முதல் ஐக்கிய அமீரகம் வரை.. கோவாக்சினுக்கு அனுமதி இல்லை.. இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழி
டெல்லி: பல சர்வதேச நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ள போதிலும், கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO அனுமதி கிடைக்காததால் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வரும் நிலையில், வேக்சின் பணிகளையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தினசரி ஒரு லட்சம் பேருக்கு வேக்சின் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்புட்னிக் வி வேக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், தற்போது வரை இந்தியாவில் அதன் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

கோவாக்சின் தடுப்பூசி
இதனால், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைக் கொண்ட வேக்சின் பணிகள் நடைபெறுகிறது. இதில் கோவாக்சின் இந்தியாவின் முதல் தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. இதனை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆரும் இணைந்து உருவாக்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் 77% வரை பலன் அளிப்பது மூன்றாம் கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. இது கோவிஷீல்டை விட அதிகம்.

உலக நாடுகள்
அதேபோல நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிலிருந்து திரும்புவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மெல்லத் தளர்த்தி வருகிறது. ரஷ்யா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா என பல்வேறு நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. பல மாதங்களாக விதிக்கப்பட்ட தடையை உலக நாடுகள் தற்போது நீக்கத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய அமீரகம்
இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமீரகத்திலும் இந்தியாவிலிருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முறையான குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள், தூதர்கள் ஆகியோருக்கு அந்நாட்டு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், அவர்கள் ஐக்கிய அமீரகம் அனுமதி அளித்துள்ள வேக்சின்களின் இரண்டு டோஸ்களை கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வேக்சின்கள்
தற்போது வரை ஐக்கிய அமீரகம் சீனாவின் சினோபார்ம், அமெரிக்காவின் பைசர், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி ஆகியவற்றுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் போட்டுக் கொண்டவர்கள் ஐக்கிய அமீரகத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2.5 கோடி பேர்
ஐக்கிய அமீரகம் மட்டுமில்லை பிரிட்டன், அமெரிக்கா, கனடா, என இந்தியர்கள் அதிகம் செல்லும் எந்த நாட்டிலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், நாடு முழுவதும் கோவாக்சின் எடுத்துக் கொண்ட 2.5 கோடி பேர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரத் பயோடெக்
கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைக்காததாலேயே பல நாடுகளும் அதனை அங்கீகரிக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக பாரத் பயோடெக் முயன்று வருகிறது. இதற்குத் தேவையான 90% ஆவணங்களை ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம் WHOக்கு அனுப்பிவிட்டது.

WHO நிலைப்பாடு
இருந்தாலும்கூட தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை. இது தொடர்பான உலக சுகாதார மையத்தின் நிர்வாகிகளுடன் பாரத் பயோடெக் நிர்வாகிகள் கடந்த ஜூன் 23ஆம் தேதி ஆலோசனை நடத்தினர். அதிலும்கூட இறுதி முடிவு எடுக்கவில்லை. பாரத் பயேடெக் நிறுவனம் இன்னும் சில தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே ஒப்புதல் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் WHO தெரிவித்துள்ளது.

ஒரே வழி
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் இல்லாததால், வேக்சின் போட்டுக் கொண்ட பின்னரும் வெளிநாடுகளுக்குப் பல இந்தியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் எடுத்துக் கொண்டுள்ளதால் அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களும்கூட மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்காவிலுள்ள பல பல்கலைக்கழகங்களும் தங்கள் மாணவர்களை அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள ஏதேனும் ஒரு வேக்சினின் 2 டோஸை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளன. கோவாக்சினுக்கு WHO ஒப்புதல் கிடைக்கும் வரை இது மட்டும் ஒரே வழி..!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications