பட்ஜெட் தயாரிப்பு.. 5 பேர் குழுவில் இடம்பெற்ற தமிழக அதிகாரி.. யார் இந்த ஐவர்? முக்கிய பங்கு என்ன?
டெல்லி: 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்குவதற்கு முன்னர் எந்தவித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்காகவும் மகிழ்ச்சியாக தொடங்க வேண்டும் என்பதற்காகவும் நிதியமைச்சராக இருப்பவர் அல்வா தயாரித்து நிதித் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குவது வழக்கம்.
அதன் பிறகு பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் எல்லாம் முழு வீச்சில் நடைபெறும். அந்த வகையில் இந்த முறை அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பட்ஜெட்டிற்கு முன்னர் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பட்ஜெட் தயாரிப்பில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமல்லாமல் முதன்மை குழுவை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த குழுவில் டி வி சோமநாதன், தருண் பஜாஜ், அஜய் சேத், தேபாஷிஷ் பாண்டா, துஹின் காந்தா பாண்டே ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர்தான் ஒவ்வொரு முறையும் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

தமிழக அதிகாரி டி.வி.சோமநாதன்
அந்த வகையில் இந்த ஆண்டும் அவர்களுடைய செயல்பாடு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த டி வி சோமநாதனும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு கேடரை சேர்ந்த சோமநாதன் 1987 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்றார். இவர் 2015 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 5 பேரில் மூத்த அதிகாரியும் இவர்தான். இவர் நிதி துறை செயலாளர் அந்தஸ்தில் உள்ளதால் கொரோனாவால் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வளர்ச்சியை உறுதிப்படுத்த மூலதனச் செலவினங்களில் அதிக செலவு செய்ய அமைச்சகத்தை முன்னெடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது இல்ல திருமணத்திற்கு சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த தருண் பஜாஜ்
நிதியமைச்சகத்தின் வருவாய் செயலாளராக உள்ளவர் தருண் பஜாஜ். பிரதமர் அலுவலகத்திலிருந்து பணியமர்த்தப்பட்டவர். இவர் வரி இலக்குகளை உறுதி செய்யும் பணியை செய்து வருகிறார். கொரோனா காலத்தில் ஹெல்த்கேர் பேக்கேஜ்களை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

யார் இந்த அதிகாரி அஜய் சேத்
ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு பொருளாதார விவகாரச் செயலாளராக சேருவதற்கு முன்னர் பெங்களூரு மெட்ரோவின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார் அஜய் சேத். நிர்மலா சீதாராமனின் அனைத்து பட்ஜெட் உரைகளையும் சோமநாதனுடன் சேர்ந்து உருவாக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு. வருமானம் ஈட்டுவதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பெரிய திட்டங்களுக்கு இவர் நிதி ஒதுக்குவார்.

யார் இந்த தேபாஷிஷ்
1987 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேபாஷிஷ் பாண்டா தேர்வானார். இவர் நிதி சேவைத் துறை தலைவராக இருந்து வருகிறார். கொரோனா காலத்தில் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டதற்கு இவரும் முக்கிய காரணமாவார். இதை அவர் மேலும் எளிதாக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

யார் இந்த துஹின் காந்தா
ஏர் இந்தியாவின் பங்கு விலக்ககில் (disinvestment) துஹின் முக்கிய பங்கு வகித்தார். பொது பங்கு வெளியீடு மூலம் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வது. DIPAM (முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாக மேலாண்மைத் துறை) இன் செயலாளரான பாண்டே, அரசாங்கத்தின் பங்கு விலக்கு திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications