டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகிலேயே அதிக உயரமான டாப் 10 சிலைகள் பட்டியல் இங்கே

Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் டாப் 10 உயரமான சிலைகள் இவைதான்- வீடியோ

    டெல்லி : உலகிலேயே உயரமான சிலையாக இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் உயரமான சிலைகள் என்று கருதப்படும் டாப் 10 சிலைகள் எந்தெந்த நாடுகளில் அமைந்திருக்கிறது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

    10 . லிங்ஷான் புத்தர் சிலை, சீனா, 88 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    சீனாவின் ரோங்ஷான் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிலை. இதன் உயரம் 88 மீட்டர், முழுவதும் வெண்கலத்தால் ஆன சிலை. இதன் எடை 700 டன். 74 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா இடத்தில் புத்த மதத்தை அறிந்து கொள்ளும் விதமாக பல இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    9. தாய்லாந்தில் உள்ள கிரேட் புத்தர், தாய்லாந்து, 92 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை அந்த நாட்டிலேயே மிக உயரமானது, இதன் உயரம் 92 மீட்டர். 1990ல் தொடங்கிய இதன் கட்டமைப்பு பணிகள் 2008ல் முடிவடைந்தது. இந்த சிலை முழுவதும் சிமெண்ட்டால் செய்யப்பட்டது, வெளிப்பூச்சில் தங்கம் பூசப்பட்டுள்ளது. தேர்வாடா புத்த கொள்கைகளின் அடிப்படையில் கிரேட் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    8 பீட்டர் தி கிரேட் சிலை, ரஷ்யா, 96 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    ரஷ்யாவை 43 ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசர் முதலாம் பீட்டருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோ நகரின் மாஸ்க்வா நதிக்கரையை நோக்கியபடி 98 மீட்டர் உயரத்தில் பீட்டர்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது ஜியார்ஜியன் வடிவமைப்பாளர் ஜூரப் ட்செரெடெலியால் வடிவமைக்கப்பட்டது. 600 டன் இரும்பு மற்றும் வெண்கலத்தை பயன்படுத்தி 100 டன் எடையில் 1997ம் ஆண்டு சிலை நிறுவப்பட்டது.

    7 சென்டாய் டய்கனோன், ஜப்பான், 100 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    ஜப்பானின் சென்டாயில் அமைந்துள்ள சென்டாய் டாய்கனோன் சிலை 100 மீட்டர் உயரம் கொண்டது. ஜப்பானிய புத்த போதிசாத்வாவை இந்த சிலை குறிக்கிறது. சென்டாய் மலைப்பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த சிலையை நகரின் பல பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும்.

    6. பேரரசர்கள் யான் மற்றும் ஹீவாங், சீனா, 106 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    சீனப்பேரரசர்கள் யான் மற்றும் ஹீவுங்கை நினைவுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள சிலை. 1987ல் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டி முடிக்கப்பட்டது. இந்த சிலைகள் 106 மீட்டம் உயரத்தில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    5. சன்யாவின் தெற்கு கியான் யின்

    Here is the list of top 10 tallest statues all over world

    புத்த மதத்தில் வழிபடப்படும் பெண் கடவுள் கியான் யின் சிலை சீனாவின் ஹைனான் மாகாணத்தை பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது 108 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு 3 வெவ்வேறு முக அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்கும் விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. முதல் முகம் நிலத்தை நோக்கியும் மற்ற 2 முகங்கள் கடலை நோக்கும் படியும் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 6 ஆண்டுகால அவகாசத்தில் இந்த சிலையானது உருவானது.

    4. உஷிகு டய்புட்சு, ஜப்பான் 110 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    உஷிகு டய்புட்சு என்றால் ஜப்பானின் உஷிகு நகரில் அமைந்துள்ள கிரேட் புத்தர் சிலை என்று அர்த்தமாம். இந்த சிலை 110 மீட்டர் உயரம் கொண்டது. இந்த புத்தர் சிலை முழுவதும் வெண்கலத்தால் செய்யப்பட்டது.

    இந்தச் சிலையில் 4 வெவ்வேறு நிலைகள் உள்ளன. பார்வையாளர்கள் எஸ்கலேட்டர் மூலம் சிலையின் உச்ச பகுதிக்கு செல்லலாம். முதல் நிலையில் பார்வையாளர்கள் அழகான இசையையும், 2வது நிலையில் கல்வெட்டுகளை படிக்கவும் முடியும். 3வது நிலையில் 30000 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. உச்ச நிலைக்கு சென்ற பின்னர் பார்வையாளர்கள் சிலைகள் சூழப்பட்டு அமைக்கப்பட்டுள்ள அழகான தோட்டத்தை பார்வையிடலாம்.

    3. லேக்யுன் செட்கியார், மியான்மர், 116 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    உலகின் 3வது உயரமான சிலை, மியான்மரின் மான்வாவில் 116 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. லேக்யுன் செட்கியார் சிலை 1996ல் கட்டத் தொடங்கி 2008ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச் சிலையின் உள்ளே எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் எஸ்கலேட்டர் மூலம் சிலையின் உச்சத்திற்கு சென்று நகரை கழுகுப் பார்வையில் கண்டு ரசிக்கலாம்.

    2. ஸ்பிரிங் டெம்பிள் புத்தர், சீனா, 153 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    உலகின் இரண்டாவது மிக உயரமான சிலை, இதன் உயரம் 153 மீட்டர், சீனாவின் ஹெனானில் அமைந்துள்ளது. 1997ல் கட்டத்தொடங்கி 2008ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச் சிலையானது 20 மீட்டர் உயர தாமரையின் மேல் நிற்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

    1. ஒற்றுமை சிலை, இந்தியா, 182 மீட்டர்

    Here is the list of top 10 tallest statues all over world

    உலகிலேயே மிக உயரமான சிலையாக இந்தியாவின் ஒற்றுமை சிலை திகழ்கிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை வதோதரா நகருக்கு அருகில் சர்தார் சரோவர் அணைக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. படேலின் பிறப்பிடமான குஜராத் மாநிலத்தில் அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்தச் சிலையானது நிறுவப்பட்டுள்ளது.

    குமரி முனையில் நிற்கும் கம்பீர திருவள்ளுவரை மறக்க முடியுமா.. இந்தியாவின் உயரமான சிலைகள் இவைதான்!குமரி முனையில் நிற்கும் கம்பீர திருவள்ளுவரை மறக்க முடியுமா.. இந்தியாவின் உயரமான சிலைகள் இவைதான்!

    English summary
    The impressive statues around the world stand for honoring great personalities and important events in the history. what are the top 10 tallest statues all around the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X