டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காந்தி பொம்மையை சுட்டு கைதாகி ஜாமீனில் வெளி வந்த பெண் சாமியாருக்கு தடபுடல் வரவேற்பு

இந்து மகா சபை பூஜா சகுண் பாண்டேவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

அலிகார்: ஜாமீனில் வெளியே வந்தும் இன்னும் அதே அமர்க்கத்தோடுதான் இருக்கிறார்கள் இந்து மகா சபையினர். மகாத்மா காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு கைதாகி,ஜாமீனில் வந்துள்ள பூஜா பாண்டே உள்ளிட்டவர்களுக்கு தடபுடல் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30- ந் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. ஆனால் அலிகாரில் உள்ள இந்து மகா சபாயினர் காந்தியின் உருவப்படத்தை அவமதித்தனர்.

அவர்கள் அலுவலகத்திலேயே காந்தியின் உருவப்படத்தை வைத்து அதை இந்து மகா சபா நிர்வாகி பூஜா பாண்டே துப்பாக்கியால் சுடுவது போல போஸ் கொடுத்தார்.

துப்பாக்கியால் சுட்டார்

துப்பாக்கியால் சுட்டார்

பிறகு காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரியாதை செலுத்தி, இனிப்புகளும் வழங்கப்பட்டது. இறதியாக காந்தியின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றியும் எரித்தனர். இதை வீடியோவாக எடுத்து அந்த அமைப்பினர் பதிவிட நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பாராட்டு விழா

பாராட்டு விழா

இதையடுத்து, பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அனைவருமே ஜாமீனில் வந்துவிட்டனர். இப்படி ஜாமீனில் வெளிவந்துள்ளதால், பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேருக்கும் இந்து மகா சபா சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

வீர வாள்

வீர வாள்

இந்த சபாவின் அகில இந்தியத் தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக் என்பவர் பகவத் கீதையுடன் பெரிய வாள் ஒன்றை பூஜா பாண்டேவுக்கு வழங்கி கவுரப்படுத்தி உள்ளார். அது மட்டும் இல்லை. இந்த கூட்டத்தில் சந்திரபிரகாஷ் கௌசிக் பேசும்போது, "நாங்கள் போலீசுக்கு பயப்பட போறது கிடையாது. பூஜா பாண்டே செய்ததில் ஒரு தப்பும் இல்லை. எங்களுக்கு உதவிக்கரமாக இருந்த வக்கீல்களுக்கு நன்றி" என்றார்.

ஒரு தவறும் இல்லை

ஒரு தவறும் இல்லை

இப்படி நடந்த நிகழ்வை அலிகார் போலீஸ் வீடியோவாக எடுத்து இருக்கிறது. மேலும் இந்த நிகழ்வில் ஏந்த ஆட்பேசத்துக்குரிய விஷயமும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

English summary
Hindu Maha sabha fets activits whyo Fired at Mahatma Gandhi's effigy shot up
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X