டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 63,490 பேருக்கு கொரோனா பாதிப்பு- குணமடைவோர் விகிதம் 71.71%

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 63,490 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 71.1% ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விவரம்:

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது! உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது!

24 மணிநேரத்தில் 63,490 பேருக்கு கொரோனா

24 மணிநேரத்தில் 63,490 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 63,490 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,89,692 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 18,62,258. அதாவது இந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதமானது 7.171% ஆக உள்ளது.

50,000-த்தை நெருங்கியது மரணம்

50,000-த்தை நெருங்கியது மரணம்

இந்தியாவில் ஒரே நாளில் 944 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 49,980. இந்தியாவில் ஆகஸ்ட் 7-ந் தேதி முதல் நாள் தோறும் 60,000க்கும் குறையாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.93% ஆக உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,77,444. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இது 26.16%. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 7-ந் தேதியன்று 20 லட்சத்தைத் தாண்டியது. இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

க்டிவ் கேஸ் மாநிலங்கள்

க்டிவ் கேஸ் மாநிலங்கள்

மகாராஷ்டிராவில் தற்போது 1,56,719 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்ததாக ஆந்திராவில் 88,138 பேரும் கர்நாடகாவில் 81,284 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4-ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் மொத்தம் 54,213 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

English summary
India’s Coronavirus tally rose to 25,89,682 with a single-day spike of 63,490 infections, while the total number of recoveries rose to 18,62,258 on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X