உலகில் மத ரீதியாக தாக்குதல் நடக்கும் நாடுகளின் பட்டியல்.. டாப்பில் வந்த இந்தியா.. அதிர்ச்சி ஆய்வு!
உலகிலேயே மதம் சார்ந்த தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 நாடுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: உலகிலேயே மதம் சார்ந்த தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 நாடுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் மார்க் ப்ரோமகர் என்பவர் தலைமையில் உலகம் முழுக்க பத்திரிக்கையாளர்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மதம் சார்ந்த பிரச்சனைகள் என்ன நடக்கிறது, சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

எந்த நாடுகள் எல்லாம்
மொத்தம் 196 நாடுகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 38 நாடுகள் மத துவேஷம் கொண்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 நாடுகள் சிறுபான்மையினருக்கு எதிராக பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோசம்
இந்த நிலையில் அந்த 18 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்து இருக்கிறது. முக்கியமாக இந்தியா டாப் 5 நாடுகளில் இடம்பிடித்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது என்று ஆய்வில் கூறியுள்ளனர்.

பிற முக்கிய நாடுகள்
இந்தியாவை அடுத்து சீனாவிலும் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடக்கிறது. அங்கு கிறிஸ்துவர்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். அதன்படி சீனா, நைஜர், மியான்மர், அல்ஜீரியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில்தான் சிறுபான்மையினருக்கு எதிராக மத தாக்குதல்கள் நடக்கிறது.

மிகப்பெரிய அவமானம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் போர் நடக்கும், சிரியா, காஸா , பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் கூட பிற மதத்தை சேர்ந்தவர்கள் இப்படி மோசமாக நடத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதீத தேசியவாத கொள்கைதான் இதற்கு காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications