அமைதியான நாடுகள் பட்டியல்.. சரிந்த அமெரிக்கா.. சாதித்த ஐரோப்பா... இந்தியாவுக்கு எந்த இடம்?
டெல்லி: 2021ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி, இந்தியா 135வது இடம் பிடித்துள்ளது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சிந்தனைக் குழு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 163 நாடுகளில் நிலவும் உள்நாட்டு வன்முறை, அகதிகள், பயங்கரவாதம், அரசியல் நிலையற்றத்தன்மை உள்பட 28 அளவுகோல்கள் அடிப்படையில் இந்த பட்டியலை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலிடம் யாருக்கு?
உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், 14வது ஆண்டாக ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதன்பின் நியூசிலாந்து 2வது இடத்திலும், அயர்லாந்து 3வது இடத்திலும் உள்ளது. அதேபோல் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதுடன், பிற நாடுகளில் அமைதியை நிலைநாட்ட உதவும் டென்மார்க் 4வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 7ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரியா இம்முறை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டாப் 10ல் ஐரோப்பாவுக்கு 7 இடங்கள்
நட்சத்திர கால்பந்து வீரரான ரொனால்டோவின் சொந்த நாடான போர்ச்சுக்கல் 6வது இடத்திலும், ஸ்லோவேனியா 7வது இடத்தில் உள்ளன. அதேபோல் பயங்கரவாத , குற்றச்செயல்கள் குறைவால், பாதுகாப்பான நாடாக விளங்கும் செக் குடியரசு 8வது இடத்தையும், வெளிப்படையான சட்ட அமைப்பு, காவல்துறை கட்டமைப்பு ஆகியவற்றால் சிங்கப்பூர் 9வது இடத்தையும் பிடித்துள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு பின், சர்வதேச சமூகத்திடம் நிலைத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்காற்றி வரும் ஜப்பான் 10வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 7 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சரிந்த அமெரிக்கா
2008ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளது. உள்நாட்டு அமைதியின்மை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா 129வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் மறுபக்கம் இன்னொரு முக்கிய நாடான இங்கிலாந்து, இரண்டு இடங்கள் முன்னேறி 34வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா முன்னேற்றம்
இந்தப் பட்டியலில் இந்தியா 135வது இடத்தை பிடித்துள்ளது. 2020ம் ஆண்டு 138வது இடத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது 3 இடங்கள் முன்னேறியுள்ளது. தெற்காசியா அளவிலான நாடுகள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் நமது அண்டை நாடுகளான நேபாள் 73வது இடத்திலும், இலங்கை 90வது இடத்திலும், வங்கதேசம் 96வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 147வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மொத்தமுள்ள 163 நாடுகளில், 84 நாடுகளில் அமைதி முன்பை விட அதிகமாக சீர்குலைந்துள்ளது. 77 நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications