திடீர் வேகம்! ஒரே நாளில் இந்தியாவில் 18,930 பேருக்கு கொரோனா.. உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் அச்சம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் கணிசமாக அதிகரித்து உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியது.
இதனால் ஓமிக்ரான் மிக விரைவில் கட்டுக்குள் வந்தது. அதேபோல உயிரிழப்புகளும் ஓமிக்ரான் கொரோனா காரணமாகப் பெரியளவில் இல்லை.

கொரோனா
சில மாதங்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இப்போது நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 13 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று அதைவிடக் கூடுதலாக 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு
அதேபோல ஒரே நாளில் 35 பேர் நாட்டில் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். நேற்று 19 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணங்கள் 5,24,305ஆக உள்ளது. கொரோனா உயிரிழப்புகளைத் தடுப்பதில் வேக்சின் மிக முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. அனைவரையும் வேக்சின் எடுத்துக் கொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டில் இதுவரை 198 கோடி கொரோனா வேக்சின்கள் போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இப்போது நாடு முழுவதும் 1,19,457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 0.27% ஆகும். நேற்று நாட்டில் 1,15,212 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை சுமார் 4000 வரை அதிகரித்து உள்ளது.

டிஸ்சார்ஜ்
அதேபோல ஒரே நாளில் 14,650 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதன் மூலம் குணமடைவோர் விகிதம் 98.53 சதவிகிதமாக உள்ளது. இதுவரை நாட்டில் 4,29,21,977 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். நாட்டில் விரைவில் பண்டிகை காலம் வர உள்ளதால், மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் எனக் கடந்த வாரம் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications