இந்தியாவில் 154 நாட்களுக்குப் பின்னர் குறைந்த கொரோனா பாதிப்பு- 24மணிநேரத்தில் 25,166 பேருக்கு தொற்று
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 437 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,87,05,980. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு 43,83,786 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 18,71,01,209 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,03,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஈரானில் 41,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 3-வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,438 ஆகும்.

இந்தியாவில் பாதிப்பு குறைகிறது
உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நேற்று 15,63, 985 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 154 நாட்களில் பதிவான மிக குறைவான கொரோனா பாதிப்பு இது. நேற்றை ஒப்பிடுகையில் 23% குறைவு இது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,50,679 ஆக அதிகரித்தது. இந்தியாவில் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் எண்ணிக்கை 49,66,29, 524 .

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 36,830. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,14,48,754. நாட்டின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைதல் என்பது 97.51% ஆக உள்ளது.

குறைந்த ஆக்டிவ் கேஸ்கள்
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 437. இந்தியாவில் இதுவரை ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை மொத்தம் 4,32,079. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,69,846. இது கடந்த 146 நாட்களில் குறைவான எண்ணிக்கையாகும்.

54.58 கோடி பேருக்கு தடுப்பூசிகள்
நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 56,81,32,750 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கையிருப்பாக 2,25,52,523 கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. இதுவரை மொத்தம் 54.58 கோடி பேருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications