இந்தியாவில் பாதிப்பு கூடுகிறது- நேற்று 8,774 பேருக்கு கொரோனா உறுதி-621 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் கொரோனாவால் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் மீண்டும் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.
தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கான விமான சேவைகளை ரத்து செய்து புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவின் ஓமிக்ரான் பாதிப்பு?
இந்தியாவிலும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையத்து வெளிநாட்டு விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பாதிப்பு கூடுகிறதா?
இதனிடையே இந்தியாவில் கடந்த் 24 மணிநேரத்தில் 8774 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட சற்று கூடுதலான பாதிப்பாகும். அதாவது வெள்ளிக்கிழமையன்று 8,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் நேற்று கொரோனாவால் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் தற்போதைய நிலையில் 1.05 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் (ஆக்டிவ் கேஸ்கள்). இது கடந்த 543 நாட்களை ஒப்பிடுகையில் மிக குறைவானதாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 98.34% ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 9,481 பஏர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள்
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,523. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,68,554. நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,39,98,278. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 12,19,47,1134. இதுவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 135 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 22.83 கொரோனா தடுப்பூசிகள் இருக்கின்றன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications