எங்களுடன் நட்பு.. பாகிஸ்தானுக்கு மட்டும் ராணுவ உதவியா? அமெரிக்காவை விளாசும் இந்தியா.. விமர்சனம்
டெல்லி: அமெரிக்கா சமீபத்தில் பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு கண்டனத்திற்குரியது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ-க்கு தனது கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்துள்ளது.

ஊடுருவல்
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஊடுருவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்திருக்கும் நிலையில் இதற்கு அந்நாட்டு ராணுவம் பயிற்சி கொடுப்பதாக அவ்வப்போது உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது இந்திய ராணுவத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறத்தில் சீன ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் இந்தியா போராட வேண்டி இருக்கிறது.

கண்டனம்
இந்த சூழலில் அமெரிக்கா, பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தது. இது இந்திய மதிப்பில் ரூ.3,500 கோடியாகும். இந்த தொகையை வைத்து மூன்று ரபேல் விமானங்களை வாங்க முடியும். கடந்த நான்கு ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்த உதவியை விட இது அதிகமானதாகும்.எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

உதவி
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ-க்கு தனது கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்துள்ளது. அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த முடிவின் நோக்கத்தை குறிப்பிட்டு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளனது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இவ்வாறு உதவுவது என்பது இது முதல் முறையல்ல. ஆனால் கடந்த 2018ல் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில், ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் அவர்களின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றவும் பாகிஸ்தான் தவறியதற்காக அந்நாட்டிற்கான சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான உதவியை டிரம்ப் நிறுத்தினார்.

பயங்கரவாத எதிர்ப்பு
ஆனால் தற்போது உதவிகள் வழங்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயங்கரவாத்தை பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்க்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த உதவி பாகிஸ்தானின் கடற்படையை மேலும் பலப்படுத்த உதவும். நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவி வருவதன் மூலம் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக தனது பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்து செய்துவருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு எதிராக அமையக்கூடும் என்கிற அச்சமும் மேலெழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications