டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினமும் 30நிமிடங்கள் மீம்ஸ் பார்க்கும் இந்தியர்கள்.. ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்!

இந்தியர்கள் தினமும் மீம்ஸ் பார்க்க 30 நிமிடங்கள் செலவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 30 நிமிடம் மீம்ஸ் பார்க்க நேரம் ஒதுக்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சமீபகாலமாக மக்களின் பெரிய ஸ்ட்ரஸ் பஸ்டரே மீம்ஸ் பார்ப்பதுதான். எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும், மீம்ஸ் பார்த்தால் வாய் விட்டு சிரிக்கலாம் என மக்கள் நினைப்பதால், நாளுக்கு நாள் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகைச்சுவையாக மட்டுமல்லாமல், சமயங்களில் சிந்திக்கவும் வைப்பதால் மீம்ஸுக்கு ரசிகர்கள் ஏராளம்.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட மீம்ஸைப் பார்ப்பதற்கு, ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இந்தியர்கள் தினமும் 30 நிமிடம் பார்ப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி.. 7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி..

மன அழுத்தத்திற்கு மருந்து

மன அழுத்தத்திற்கு மருந்து

ரெட்ஷீர் என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளை அறிவித்துள்ளது. அதில், பெரும்பாலான பயனர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மீம்ஸ் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொழுதுபோக்கு துறையில் மீம்ஸ்கள் உச்சத்தில் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ரசிகர்கள் அதிகரிப்பு

ரசிகர்கள் அதிகரிப்பு

மேலும், மீம்ஸ் பார்ப்பவர்களின் சதவீதம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு, மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மீம்ஸ்களை உருவாக்க உதவும் தளங்களின் எண்ணிக்கையும் சந்தையில் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீம்ஸ் கிரியேட்டர்கள்

மீம்ஸ் கிரியேட்டர்கள்

சமூகவலைதளங்கள் தான் மீம்ஸ்களை மக்கள் அதிகளவில் பார்ப்பதற்கு பிரதான தளமாக இருக்கிறதாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கூறுவதைக் கேட்டும், அதிகமானோர் மீம்ஸ்களை ஆர்வமுடன் பார்க்கிறார்களாம். கூடுதல் தகவலாக, மீம்ஸைப் பார்க்கும் பார்வையாளர்களில் 90 சதவீதம் பேர் மீம்ஸ் கிரியேட்டர்களாகவே மாறி விடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இதெல்லாமும் காரணம்

இதெல்லாமும் காரணம்

சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்வதன் மூலம் தங்களது குரூப்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள முடியும் என மக்கள் நம்புவதாகவும், ஏனென்றால் பெரும்பாலானோர் எல்லா மீம்ஸ்களும் அவர்களது சொந்த வாழ்க்கையில் ஒத்துப் போவதாக கருதுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதனாலேயே மீம்ஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

English summary
The Indian smartphone users are spending 30 minutes a day on consuming memes and 80 per cent have increased meme consumption in the last year, a new report showed on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X