டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெட்கப்படுறேன்.. வேதனைப்படுறேன்! காஷ்மீர் பைல்சை விமர்சித்த இயக்குநருக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவா திரைப்பட திருவிழாவில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல் இயக்குநர் நாதவ் லாபிட் வெட்கப்பட வேண்டும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலான் விமர்சித்து இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "காஷ்மீர் பைல்ஸ் படத்தை விமர்சித்த நாதவ் லாபிடுக்கு எனது பகிரங்க கடிதம். இந்திய சகோதர சகோதரிகளுக்கு புரிய வேண்டும் என்பதால் ஆங்கிலத்தை இப்பதிவை எழுதுகிறேன்.

இது நீளமான பதிவு. எனவே கடைசி வரியை முதலிலிலேயே தெரிவிக்கிறேன். நீங்கள் இதற்கு வெட்கப்பட வேண்டும். இந்திய கலாச்சாரத்தில் விருந்தினர்கள் கடவுளை போன்றர்கள். கோவா சர்வ

தேச திரைப்பட திருவிழா நடுவர்களின் தலைமை பொறுப்புக்கு இந்தியா உங்களை அழைத்தது.

பொங்கல் 2023: ரூ 1000 பரிசுத் தொகை பெற வங்கிக் கணக்கு கட்டாயம்.. தமிழக அரசு புதிய உத்தரவுபொங்கல் 2023: ரூ 1000 பரிசுத் தொகை பெற வங்கிக் கணக்கு கட்டாயம்.. தமிழக அரசு புதிய உத்தரவு

இந்தியாவின் நட்பு

இந்தியாவின் நட்பு

இந்தியாவின் அழைப்பையும் அவர்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கையையும், சிறப்பான கவனிப்பையும் மோசமான வகையில் நீங்கள் அவமதித்து இருக்கிறீர்கள். இந்தியாவை சேர்ந்த நமது நண்பர்கள் இஸ்ரேல் மீது செலுத்தும் அன்பை பலர் பெற்று உள்ளார்கள். அதன் அடிப்படையிலேயே உங்களை இஸ்ரேலியராகவும், என்னை இஸ்ரேல் தூதராகவும் இந்தியா அழைப்பு விடுத்திருக்கலாம்.

பணிவாக இருக்க வேண்டும்

பணிவாக இருக்க வேண்டும்

நீங்கள் நடந்துகொண்ட விதத்தை நியாயப்படுத்த முயல்வதன் காரணத்தை நான் புரிந்துகொள்கிறேன். மிகப்பெரிய திரைப்பட கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்தியா, இஸ்ரேலின் தகவல்களையும் எடுத்துக்கொள்ளும் சூழலில் நாம் பணிவாக இருக்க வேண்டும். நான் சினிமா நிபுணர் இல்லை. ஆனால், வரலாற்று நிகழ்வுகளை ஆழமாக படிக்காமல் அதுபற்றி பேசுவது ஆணவப்போக்காகும்.

இந்தியாவின் வடு

இந்தியாவின் வடு

அந்த சம்பவம் இந்தியாவின் வடுவாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் உள்ளார்கள். அதற்கான விலையை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். யூத இன அழிப்பிலிருந்து தப்பியவரின் மகனான நான், உங்கள் பேச்சால் இந்தியர்கள் மனம் கடுமையாக புண்பட்டு இருப்பதை கண்டு வேதனை அடைந்தேன்.

காஷ்மீர் பிரச்சனை

காஷ்மீர் பிரச்சனை

நான் கடுமையாக இதனை கண்டிக்கிறேன். இதனை நியாயப்படுத்தவே முடியாது. காஷ்மீர் பிரச்சனையில் இருக்கும் மக்களின் உணர்வையே இது காட்டி இருக்கிறது. காஷ்மீர் பைல்ஸ் படம் மீதான விமர்சனத்துக்கும், இஸ்ரேல் அரசியலை நீங்கள் எதிர்ப்பதற்கும் இடையில் உள்ள தொடர்பை நீங்கள் ஊடகத்துக்கு அளித்த பேட்டி உணர்த்துகிறது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

கடந்த காலங்களைபோல் இஸ்ரேலில் நீங்கள் விரும்பாத செயல்கள் மீதான விமர்சனங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த தயங்க வேண்டாம். ஆனால், மற்ற நாடுகளிடம் நீங்கள் விரக்தியை வெளிப்படுத்தாதீர்கள். இதுபோன்ற ஒப்பீடுகளை செய்யும் உங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதா என எனக்கு தெரியவில்லை.

இஸ்ரேலின் பிரதிநிதி

இஸ்ரேலின் பிரதிநிதி

தைரியமான நீங்கள் இஸ்ரேலுக்கு திரும்பி இதுகுறித்து அறிக்கை வெளியிடுவீர்கள் ஏன்று நினைக்கிறேன். ஆனால், இஸ்ரேலின் பிரதிநிதிகளான நாங்கள் இங்கேயே தங்குவோம். உங்கள் துணிச்சலின் விளைவாக எங்கள் அணியில் ஏற்படும் தாக்கங்களை நீங்கள் பார்க்க வேண்டும்.

வெட்கப்படுகிறேன்

வெட்கப்படுகிறேன்

இஸ்ரேல் மற்றும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. நீங்கள் ஏற்படுத்திய சேதத்தில் இருந்து அது தப்பிவிடும். எங்களை அழைத்தவர்களின் தாராள மனப்பான்மை மற்றும் நட்பிற்கு பதிலாக நாம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து வெட்கப்படுகிறேன்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Isreal envoy condemn Isreal director for criticising Kashmir files movie. He tweeted that, "An open letter to Nadav Lapid following his criticism of #KashmirFiles. It’s not in Hebrew because I wanted our Indian brothers and sisters to be able to understand. It is also relatively long so I’ll give you the bottom line first. YOU SHOULD BE ASHAMED."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X