"மிரட்டினாள்.. தீர்த்துக்கட்டினேன்".. சாரதா கொலைக்கான காரணம்.. 'நார்க்கோ' சோதனையில் உளறிய அப்தாப்
டெல்லி: "என்னை பிரிந்து சென்றுவிடுவதாக அடிக்கடி மிரட்டி வந்ததால் சாரதாவை தீர்த்துக் கட்டினேன்" என்று சைக்கோ கொலையாளி அப்தாப் 'நார்க்கோ' சோதனையின் போது தெரிவித்துள்ளான்.
இதற்கு முன்பு போலீஸாரிடம் அவன் அளித்த வாக்குமூலத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் சாரதாவை கொன்றதாக கூறிய நிலையில், நார்க்கோ சோதனையின் போது வேறு மாதிரியான பதிலை அப்தாப் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நார்க்கோ சோதனையின் போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு முரணான பதிலையே அப்தாப் அளித்திருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை வரை சென்ற 'லிவிங் டுகெதர்'
டெல்லியில் இளம்பெண் சாரதாவை அவரது காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவத்தின் அதிர்வலை இன்னும் குறையவே இல்லை. 'லிவிங் டுகெதெர்' உறவில் இருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த பயங்கர கொலைக்கு காரணமாக மாறியிருக்கிறது. இதில் சாரதாவை கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்திய சைக்கோ கொலையாளி அப்தாப்பை போலீஸார் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், பல பெண்களுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், தன்னை உடனே திருமணம் செய்துகொள்ள சாரதா வற்புறுத்தியதால் அவரை கொலை செய்ததாகவும் அப்தாப் கூறியிருந்தான்.

தலையை தேடும் போலீஸார்
ஆனால், அப்தாப் கூறிய வாக்குமூலத்தில் போலீஸாருக்கு முழுமையாக நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதேபோல, சாரதாவின் தலை எங்கே என்பதற்கும் அப்தாப் மழுப்பலாக பதிலையே கூறி வந்தார். அவர் கூறிய இடத்தில் தேடி பார்த்தும் சாரதா தலை கிடைக்கவில்லை. சாரதாவின் தலை கிடைத்தால் மட்டுமே இந்தக் கொலையை அப்தாப் தான் செய்தார் என நீதிமன்றத்தில் போலீஸாரால் நிரூபிக்க முடியும். இதுதவிர, அப்தாப்பின் நடவடிக்கைகள் யாவும் சீரியல் சைக்கோ கில்லர்களை ஒத்திருப்பதால், அவர் இதற்கு முன்பு வேறு யாரையும் கொலை செய்திருப்பார் என டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவருக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

"மிரட்டியதால் தீர்த்துக்கட்டினேன்"
எனினும், இந்த உண்மைக் கண்டறியும் சோதனையின் போது அப்தாப்புக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் இந்த சோதனையை போலீஸாரால் முழுமையாக நடத்த முடியவில்லை. இதனால் அவருக்கு சுயநினைவை இழந்து உண்மையை கூற செய்யும் நார்க்கோ சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, அப்தாப்புக்கு நேற்று காலை அந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது சுயநினைவை இழந்த அப்தாப்பிடம், "சாரதாவை ஏன் கொலை செய்தாய்?" என போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அப்தாப், "என்னை பிரிந்து சென்று விடுவதாக சாரதா அடிக்கடி மிரட்டி வந்தாள். என்னால் சாரதாவை விட்டு பிரிந்திருக்க முடியாது. இவ்வாறு அவள் என்னை தொடர்ந்து மிரட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்" என அவர் கூறினார்.

தலை எங்கே?
அதன் பின்னர், எதை வைத்து சாரதாவின் உடலை வெட்டினாய்? என கேட்டதற்கு, கத்தி, ரம்பம், ஆக்சா பிளேடு ஆகியவற்றை கொண்டு வெட்டியதாக அப்தாப் பதிலளித்தான். பின்னர் அவனிடம், சாரதாவின் தலையை எங்கே வீசினாய் என போலீஸார் ஆர்வமாக கேட்டனர். ஆனால், சுயநினைவை இழந்த போதிலும், "அதை தான் முன்பே போலீஸிடம் கூறிவிட்டனே.." என அப்தாப் கூற போலீஸார் ஏமாற்றம் அடைந்தனர். நார்க்கோ சோதனையின் போதும், சாரதாவின் தலை எங்கே என அப்தாப் கூறவில்லையே என டெல்லி போலீஸார் அப்செட்டில் உள்ளனர். எனினும், இந்த நார்க்கோ சோதனையில் பல முக்கிய தகவல்களை அப்தாப் கூறியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications