Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே! விஷயம் தெரியுமா.. ஒவ்வொரு வீட்டுக்கும் 50 லட்சம் இலவச காப்பீடு.. காஸ் சிலிண்டர் பிரச்சினைக்காக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் வீடுகளிலும் துரதிருஷ்டவசமாக விபத்து ஏற்படும்பட்சத்தில் ரூ 50 லட்சம் வரை காப்பீடு தொகையைப் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா! அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

எரிவாயு சிலிண்டர்கள் இப்போது அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருளாகிவிட்டது. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதிலும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட அனைத்து பகுதிகளிலும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

ஆனால், ஒரு எரிவாயு சிலிண்டர்களை கையாள்வதில் ஒரு சிறு தவறு கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதனால் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல விபத்து ஏற்படும்போது முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 யார் வழங்குகிறார்கள்

யார் வழங்குகிறார்கள்

மறுபுறம் கேஸ் சிலிண்டர் வெடித்தால் அல்லது கேஸ் கசிவால் விபத்து ஏற்படும் போது, வாடிக்கையாளருக்கு என்ன உரிமைகள் உள்ளது என்பது குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தியாவில் கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கேஸ் நிறுவனங்கள் மூலம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

 அதிகபட்ச தொகை

அதிகபட்ச தொகை

எரிவாயு கசிவு அல்லது எல்பிஜி சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து கேஸ் நிறுவனங்கள் இந்த காப்பீட்டை வழங்குகின்றன. சிலிண்டர் வழங்கும் முன், டீலர் அதை முறையாக பரிசோதிக்க வேண்டும். வாடிக்கையாளரின் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் விபத்தால் சேதமடைந்தால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.

 என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

விபத்து ஏற்பட்டால், 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். விபத்தில் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சிலிண்டர் விபத்து ஏற்பட்டும் போது முதலில் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சிலிண்டர் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்க FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை தேவை.

 காப்பீடு நிறுவனங்கள்

காப்பீடு நிறுவனங்கள்

கேஸ் நிறுவனங்களே காப்பீடு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தேவையானவற்றைச் செய்து கொடுக்கும். எனவே கேஸ் இணைப்பை வைத்துள்ளவர்கள் யாரும் காப்பீடு நிறுவனங்களுக்கு அலையத் தேவையில்லை என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+