டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே.. ம.பி. விவகாரம் குறித்து லைட்டாக மவுனம் கலைத்த ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பிரதேசத்தில் தமது தளபதி ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேலோட்டமாக மட்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. ஆனால் மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் ராகுல் காந்தியால் காங்கிரஸ் தலைவர் பதவியில் தாக்கு பிடிக்க முடியவில்லை.

Madhya Pradesh crisis: PM Modi destablising of elected Cong govts, says Rahul Gandhi

இதேபோல ஜோதிராதித்யா சிந்தியாவாலும் தாக்குபிடிக்க முடியவில்லை. அதனால் 19 எம்.எல்.ஏக்களுடன் கமல்நாத் அரசை கவிழ்ப்பதில் பிஸியாகிவிட்டார் சிந்தியா. இவ்வளவும் நடந்த பின்னர், காங்கிரஸ் மேலிடம் இப்போது சமரச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேநேரத்தில் ராகுல் காந்தி எங்கே போனார் என்பது நேற்று முதல் விடைதெரியாத கேள்வி. இந்நிலையில் இன்று காலை ட்விட்டர் பக்கத்தில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் ராகுல். ஆனால் நெட்டிசன்களோ சிந்தியா விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தியை பிராண்டி எடுத்துவிட்டனர்.

இதனால் வேறுவழியே இல்லாமல் இன்னொரு பதிவை போட்டுள்ளார் ராகுல் காந்தி. அதிலும் கூட , பிரதமர் மோடி அவர்களே! தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுகளை சீர்குலைப்பதைவிட பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் அக்கறை செலுத்துங்கள் என பாஸிங்காக பதிவிட்டுள்ளார். ஆனாலும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. இதற்கும் வரிந்து கட்டி கரித்து கொட்டுகின்றனர் ராகுல் காந்தியை.

இதனிடையே ஜோதிராதித்யா சிந்தியாவை காங்கிரஸ் கட்சியில் யாரும் ஒதுக்கவே இல்லை; அவருக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங். திக்விஜய்சிங்- கமல்நாத் கூட்டணியால்தான் சிந்தியா வெளியேறினார் என்கிற குற்றச்சாட்டு அனைவரும் அறிந்த ஒன்றும்கூட.

English summary
Congress Senior leader Rahul Gandhi said that Prime Minister Modi is destablising of elected Cong govt in states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X