மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பானுடன் ஒப்பந்தம்; 2026-ல் முடிவடையுமாம்- மத்திய அரசு
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த கட்டுமானப் பணிகள் 2026-ல் நிறைவடையும் என்றும் நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த அறிகுறியுமே தென்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மொத்தம் ரூ.1,464 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கூறினார். ஆனாலும் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில் 2020-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரித்துள்ளது என்றது மத்திய அரசு.

ஒற்றை செங்கல்லும் உதயநிதியும்
அதேநேரத்தில் பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என தமிழகம் முழுவதும் ஒற்றை செங்கல்லுடன் பிரசாரம் செய்து பெரிதும் கவனத்தை ஈர்த்தது. சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் அந்த ஒற்றை செங்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசு அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

மத்திய அரசு பதில்
இந்த நிலையில் லோக்சபாவில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என கூறினார்.

தென் தமிழ்நாடு ஏமாற்றம்
அதேநேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசு தெளிவுபடுத்தப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் அடுத்த ஆண்டுதான் தொடங்க உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அரசு தரப்பில் தெளிவான விளக்கம் தரப்படவில்லை என்பதால் தென்தமிழ்நாட்டு மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications