மணிப்பூரில் பாஜக முதல்வர் பதவியேற்ற மறுநாளே.. வெடித்த வன்முறை! கலவரத்தால் மீண்டும் பதற்றம்
டெல்லி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு நேற்று மீண்டும் பொறுப்பேற்றது. புதிய முதலமைச்சராக யுனம் கெம்சந்த் சிங் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இப்படி இருக்கையில், அவர் பதவியேற்ற அடுத்த நாளே வன்முறை வெடித்திருக்கிறது.
இன்று குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சூராசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. 5 குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி அமைப்புகள் விடுத்த முழு அடைப்பு போராட்டத்தால் வன்முறை வெடித்திருக்கிறது.

பாதுகாப்பு படையினருடன் மோதல்
துயிபுங் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசுதல், டயர்களை எரித்தல் மற்றும் பொது சொத்துக்களைச் சேதப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, அந்த பகுதியை சீல் செய்ய பாதுகாப்புப் படையினர் முயற்சித்தபோது போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
குக்கி அமைப்பு கடும் எதிர்ப்பு
புதியதாக அமைந்த அமைச்சரவையில் மெய்தி சமூகத்தை சேர்ந்த யுனம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகவும், குக்கி சமூகத்தை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான நெம்ச்சா கிப்கென் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். இதற்கு குக்கி-ஜோ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
துணை முதல்வரை கொன்றால் பரிசு
குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள், பாஜக தலைமையிலான குறிப்பாக மெய்தி தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆயுதம் தாங்கிய குக்கி 'கிராமத் தொண்டர்கள்' அமைப்பு, துணை முதலமைச்சரான கிப்கெனை கொன்றால் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முழு அடைப்புக்கு அழைப்பு
அதேபோல இம்பாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொன்றால் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. குக்கி அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் ஃபோரம் ஆஃப் செவன் (JF7) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறிய எம்எல்ஏ
அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள குக்கி அமைப்புகளின் உச்ச அமைப்பான குக்கி-ஜோ கவுன்சில் (KZC), 5 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 'சமூகப் புறக்கணிப்பு' அறிவிப்பை வெளியிட்டது. அரசுடன் இணைந்ததன் மூலம் இந்த எம்.எல்.ஏ.க்கள் ஜனவரி 13 அன்று கவுஹாத்தி, அசாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறியுள்ளதாக கவுன்சில் கூறியுள்ளது. இந்தத் தீர்மானம் எம்.எல்.ஏ.க்கள், KZC மற்றும் செயல்பாடுகளை நிறுத்தும் ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதக் குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?











Click it and Unblock the Notifications