கவனிச்சீங்களா.. டார்கெட் ஆன தமிழ்நாடு.. திமுகவை மாறி மாறி அட்டாக் செய்த நிர்மலா, ஸ்மிரிதி.. ஏன்?
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்திலும் சரி, இன்று நடந்த விவாதத்திலும் சரி.. தொடர்ச்சியாக திமுகவை பாஜக அமைச்சர்கள் தாக்கி பேசினார்கள். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்திருந்தாலும் கூட.. திமுக மீதுதான் கடுமையான தாக்குதல் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது.
மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்த விவாதத்தில் இன்று மத்திய அமைசர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசினார். அதில், மாற்றம் என்பது வார்த்தைகளால் உருவாகக் கூடாது- நடைமுறைகளின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். மக்களுக்கு கனவுகளில்தான் உங்கள் வாக்குறுதிகளைக் காட்டின. நாங்கள் அந்த கனவுகளை நிறைவேற்றி காட்டுகிறோம். 2014, 2019-ல் மக்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை மேற்கொண்டிருந்தனர். அடுத்த 2024 தேர்தலிலும் இதே நிலைமைதான் இருக்கப் போகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டதைப் போல எதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரை இந்தியா என மாற்றினீர்கள்? என்ன அவசியம்?.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது; மத்திய அரசின் கடனுதவி திட்டம்- தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை; அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம். பொதுவாக 750 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன; ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ 1627 கோடி மத்திய அரசு கடன் அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக மொத்தம் 900 படுக்கைகள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தமிழ்நாடு அரசுக்கு கடன் சுமையே இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி மாணவர்கள் 2022 முதல் படித்து வருகின்றன.
ஆதீனத்தால் செங்கோல் முதலாவது பிரதமரிடம் கொடுக்கப்பட்டது. முதல் பிரதமரிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் கைத்தடி என புறக்கணிக்கப்பட்டது. செங்கோலை மறந்து போய்விட்டனர்; செங்கோலை மீட்டு உரிய இடத்தில் நிறுவி இருப்பவர் பிரதமர் மோடி. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனம் என தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி.
ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு நிரந்தரமாக நடைபெற வழிசெய்தது பிரதமர் மோடி அரசு. காசி தமிழ் சங்கம், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பல சாதனைகளை செய்தது. இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது. நீங்கள் தமிழை வளர்க்கும் அதிகாரம் இருக்கும் போது சமஸ்கிருதம், இந்தியை படிக்க கூடாது என தடுக்க அதிகாரம் இல்லை.
நாம் திராவிடர் அல்லர்- நாம் தமிழர்- நம் தாயகம் தமிழ்நாடு- திராவிடம் அல்ல- அந்தணர் ஆரியர் அல்ல என சிலப்பதிகாரம் சொல்வதாக ம.பொ.சிவஞானம் கூறியிருக்கிறார். சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர் பிரதமர் மோடி. ஒரே பாரதம் உன்னத பாரதம் என சொன்னது சிலப்பதிகாரம்- அதை செயல்படுத்துகிறார்.
திரெளபதி பற்றி பேசுகிறீர்களே. ஜெயலலிதாவின் சேலையை தமிழ்நாட்டு சட்டசபையில் துகிலுரித்தீர்களே. ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கியது திமுக. ஜெயலலிதா சபதம் எடுத்து முதல்வரான பின்னரே சட்டசபைக்கு வந்தார். 1989 மார்ச் 25-ந் தேதி ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக, என்று திமுகவை விமர்சனம் செய்து நிர்மலா சீதாராமன் பேசினார்.
நேற்றும் திமுக மீது விமர்சனம்: நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் அமைச்சர் ஸ்மிரிதி இராணி திமுகவை விமர்சனம் செய்தே பேசினார். நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசினார். இதில் தமிழ்நாடு பற்றி அவர் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் தனது பேச்சில், நீங்கள் இந்தியா இல்லை, ஏனெனில் இந்தியா என்பது ஊழல் இல்லை. இந்தியா என்பது வாரிசு அரசியலில் நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக இந்தியா என்பதை மெரிட் அரசியலை, தகுதியை விரும்புகிறது . உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலேயர்களிடம் சொன்னதை இன்று நினைவில் கொள்ள வேண்டும் - இந்தியாவிலிருந்து வெளியேறு. இந்தியா ஊழலிருந்து வெளியேறு , இந்தியா வாரிசு அரசியலில் இருந்து வெளியேறு, இந்தியா கூட்டணி இதில் இருந்தெல்லாம் வெளியேற வேண்டும்.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் மிக மோசமான பேச்சுக்கு எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன். எதிர்க்கட்சிகள் இந்தியா கிடையாது, நீங்கள் ஊழல்வாதிகள், ஊழலை கண்டுபிடித்தவர்கள். மணிப்பூர் பிரிக்கப்பட்டதாக, பிளவு அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறினார். மணிப்பூரை பிரிக்க முடியாது. அது இந்தியாவின் ஒரு பகுதி. பிரிக்க முடியாது.
நீங்கள் மணிப்பூரை பற்றி பேசும் முன் தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். எங்களை பற்றி பேசும் முன் உங்கள் கூட்டணி திமுக பற்றி பேசுங்கள். ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள். நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி.தமிழ்நாட்டில் உங்கள் கூடவே இருக்கும் திமுகவை பாருங்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பண்டீட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர்களுக்கு எப்போது நீதி வழங்குவீர்கள்., என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசி உள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications