ஓரினச்சேர்க்கை.. தன்பால் ஈர்ப்பாளராக மாறிய மகன்.. டெல்லியில் தாய் செய்த ‛சம்பவம்’..குவியும் பாராட்டு
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணியில் இளைஞர் ஒருவருடன் அவரது தாயாரும் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் யஷ் (21). அங்குள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். பள்ளிப்பருவம் தொட்டே யஷ்ஷுக்கு எதிர் பாலினமான பெண்கள் மீது பெரிய அளவில் ஈர்ப்பு வந்ததில்லை.
மாறாக, ஆண்கள் மீது ஒருவிதமான ஈர்ப்பு வருவதை அவர் உணர்ந்திருக்கிறார். முதலில், இதை நினைத்து மனதிற்குள் பயந்திருக்கிறார் யஷ். மேலும், இதை யாரிடமாவது கூறினால் நம்மை கிண்டல் செய்வார்களோ என்ற அச்சமும் அவருக்கு இருந்திருக்கிறது.

வீட்டில் வெடித்த பூகம்பம்
இதனிடையே, ப்ளஸ் 2 படிக்கும் காலக்கட்டத்தில்தான், தன்பாலினத்தவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதும் ஒரு வகையான பாலுணர்வு என்பதை யஷ் உணர்ந்திருக்கிறார். எனினும், தனது வீட்டில் தன்னை பற்றி எடுத்துக் கூறுவதற்கு பயந்து வந்துள்ளார். ஆனால் இதை உடனே வீட்டில் சொல்லிவிட வேண்டும் என அவருக்கு தோன்றியுள்ளது. இதையடுத்து, தனது மாமாவிடம் இதை சொல்லி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விடுமாறு கூறியிருக்கிறார் யஷ். அவரது மாமாவும் யஷ்ஷின் பெற்றோருக்கு தெரிவிக்க வீடே பூகம்பாக மாறியுள்ளது. என்ன நடந்தாலும் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்றுக்கொண்ட பெற்றோர்
இதனைத் தொடர்ந்து, யஷ்ஷின் அத்தை பல்வேறு புத்தகங்கள், பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள், திரைப்படங்கள் ஆகியவற்றை அவர்களிடம் காட்டி ஓரினச்சேர்க்கை பாலுணர்வை பற்றி விளக்கமாக கூறியுள்ளார். இருந்தபோதிலும், யஷ்ஷின் பெற்றோர் சமாதானம் அடையவில்லை. யஷ்ஷுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்; அவனது குழந்தைகளை தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற சராசரி பெற்றோருக்கு இருக்கும் ஆசையை அவர்களால் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்து விட முடியவில்லை. யஷ்ஷின் பிரச்சினையை புரிந்துகொள்ளவே அவர்களுக்கு 2 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பின்னர், ஒரு நாள் யஷ்ஷை அழைத்த அவரது பெற்றோர், அவனது பாலுணர்வை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

மகனுடன் பங்கேற்ற தாய்
இந்நிலையில்தான், டெல்லியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதனை பார்த்த யஷ்ஷின் தாயார் மீனாட்சி, இந்தப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு அவரிடம் கூறியுள்ளார். மேலும், உனக்கு துணையாக நானும் வருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். பின்னர், தனது தாயாரை அழைத்துக் கொண்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணியில் கலந்துகொண்டார் யஷ். இந்தப் பேரணியில் யஷ் உடன் அவரது தாயாரும் கலந்துகொண்டதை பார்த்த மற்ற இளைஞர்களும், இளம்பெண்களும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

"எந்த தவறும் இல்லை"
இந்தப் பேரணியில் யஷ்ஷின் தாய் மீனாட்சி, "நாங்கள் அவனுடன் இருக்கிறோம்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கையில் ஏந்திச் சென்றார். இந்தப் புகைப்படம் சமூக வலைளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து அவரது தாயார் மீனாட்சி கூறுகையில், "முதலில் எனது மகனின் இந்த பாலுணர்வை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல நாட்கள் யஷ்ஷை நினைத்து நான் அழுதிருக்கிறேன். ஏன் அவனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது என நினைத்து கவலை அடைந்திருக்கிறேன். ஆனால், நாட்கள் செல்ல செல்லவே இது அவனுடைய தனிப்பட்ட பாலுணர்வு என்பது எனக்கு தெரியவந்தது. இதில் அவனது தவறு ஏதும் இல்லை. அப்படியிருக்கையில் எதற்காக நான் அவனை விலக்கி வைக்க வேண்டும். எந்த சூழலிலும் அவன் என்னுடைய மகன்தான். அவனுக்கு நான்தான் துணையாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. அதனால்தான் இந்தப் பேரணியில் கலந்துகொண்டேன்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications