டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு 'தி இந்து' குழுமத் தலைவர் என். ராம் தேர்வு!

Google Oneindia Tamil News

டெல்லி: மூத்த பத்திரிக்கையாளர் இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவர் என். ராம் பெருமைமிகுந்த ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பத்திரிக்கைத் துறைக்கு அவர் ஆற்றும் தன்னிகரில்லாத பங்களிப்பை மனதில் வைத்து இந்த விருதை இந்திய பிரெஸ் கவுன்சில் வழங்க முன் வந்துள்ளது.

இந்திய பிரெஸ் கவுன்சில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : பத்திரிக்கைத் துறைக்கு தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் இந்து பத்திரிக்கை குழுமத் தலைவர் என். ராம், ராஜா ராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஊடக தினமான நவம்பர் 16ம் தேதி இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

N. Ram selected for prestigious award of Rajaram mohan roy

தேசிய அளவில் பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2018ம் ஆண்டிற்கான இந்த விருதுகளைப் பெறுவோர் ரூபி சர்பார், போபால், தேஷ்பந்துவில் தலைமை செய்தியாளராக இருக்கிறார். ரத்னகிரியில் இருந்து வெளிவரும் டெய்லி புதாரியில் பணியாற்றும் ராஜேஷ் பர்சுராம் ஜோஷ்டேவும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'ரூரல் ஜர்னலிசம்' என்ற பிரிவின் கீழ் இருவருக்கும் விருது பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

டெவலப்மென்டல் ரிபோட்டிங் என்ற பிரிவின் கீழ் கேரள கௌமுதியின் இணை ஆசிரியர் வி.எஸ். ராஜேஷ்க்கு விருதளிக்க இந்திய பிரெஸ் கவுன்சில் முடிவு செய்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் சுபாஷ் பவுல், ராஷ்ட்ரிய சஹாரா இருவரும் போட்டோ ஜர்னலிசம் -சிங்கிள் செய்தி பிரிவின் கீழ் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். போட்டோ ஜர்னலிசம் -போட்டோ பிரிவின் கீழ் டெல்லியில் இருந்து வெளிவரும் பஞ்சாப் கேசரியின் செய்தியாளர் மிஹிர்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த சர்காரை விடுங்க.. முதல்ல இந்த சர்க்காரை கவனிங்க.. கவுதமன் கொட்டுஅந்த சர்காரை விடுங்க.. முதல்ல இந்த சர்க்காரை கவனிங்க.. கவுதமன் கொட்டு

சிறந்த நியூஸ்பேப்பர் கலை: கார்ட்டூன்கள், கேலிச்சித்திரங்கள் பிரிவின் கீழ் ஹைதராபாத்தில் இருந்து வெளிவரும் நவ தெலுங்கானாவின் கார்ட்டூன் எடிட்டர் பி நரசிம்மா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்போர்ட்ஸ் ரிப்போர்டிங் என்று புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரிவில் யாருமே தகுதிவாய்ந்தவர்களாக தேர்வு செய்யப்படவில்லை. பத்திரிக்கையாளர்கள், மூத்த எடிட்டர்கள் மற்றும் ஊடக நிறுவன உரிமையாளர்கள் மேலாளர்கள் கொண்ட ஜீரிகள் குழு விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
N. Ram is selected for Press council of India's prestigious award Rajaram mohan Roy for his outstanding contribution for journalism and the award will be given to him on November 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X