வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு... நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
டெல்லி: நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல மாதங்களாகவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா 2ஆம் அலையால் மோசமான பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டது. இதனால் +2 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதே கொரோனா காரணமாக நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தச் சூழலில் நீட் தேர்வு வரும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் 155இல் இருந்து 198ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். அதேபோல கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு நடைபெறும் இடங்களில் மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் NTA இணையதளத்தில் நாளை மாலை 5 மணி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications